15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..

தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி ஆகிய இருவரும், இவ்வளவு எடைகொண்ட மணியைத் தயாரித்தது இதுவே முதல்முறை என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள்.

15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..
அயோத்தி - மாடல் புகைப்படம்
  • Share this:
உத்தர பிரதேச மாநிலம்,  ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களும், சக கலைஞர்களுமான, 30 வருடம் கோவில் மணிகளைச் செய்யும் பரம்பரை அனுபவமுள்ள தவு தயால் என்பவரும்,  மணியை வடிவமைத்தவரான இக்பால் மிஸ்த்ரியும்தான் ராமர் கோவில் அடிக்கல் விழாவுக்குப் பிறகு திறமைக்கும், நட்புக்குமான  பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோவில் பணிகள்


தவு தயால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகிறார். இவரும், 2,100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்தவர் முஸ்லீம் கைவினைஞரான இக்பால் மிஸ்திரியும் இணைந்து  இதை உருவாக்கியுள்ளனர்.


கோவில் மணி உருவாக்கத்தைச் செய்தாலும், முஸ்லீம் சகோதரர்களுக்கு வடிவமைத்தல், க்ரைண்டிங் மற்றும் மெருகூட்டல் ஆகியவற்றில் நிபுணத்துவம் அபரிமிதமானது என்பதால் இதை ஒன்றிணைந்து சாதிக்க முடிந்ததாகவும், இக்பால் இதை நன்றாக வடிவமைத்திருக்கிறார் எனவும் தவு தயால் தெரிவித்துள்ளார். தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி ஆகிய இருவரும், இவ்வளவு எடைகொண்ட மணியைத் தயாரித்தது இதுவே முதல்முறை என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள்.

நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், உருக்கிய உலோகத்தை ஊற்றுவதில் 5 விநாடி தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாக போய்விடும் அபாயம் இந்த வேலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் வடிவமைப்பாளர் இக்பால். நம்பிக்கையிருந்தாலும், ஒரு விதமான பதற்றமும் இருந்தது. இப்போது இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது எனவும் இக்பால் தெரிவித்துள்ளார்.

இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது எனத் தெரிவிக்கும் இக்பால், தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading