Home /News /trend /

டெலிவரிக்கு சில மணிநேரங்கள் முன்பு வரை தனது வேலைகளை செய்து பலரையும் அசரடித்த ஜெய்ப்பூர் மேயர்!

டெலிவரிக்கு சில மணிநேரங்கள் முன்பு வரை தனது வேலைகளை செய்து பலரையும் அசரடித்த ஜெய்ப்பூர் மேயர்!

ஜெய்ப்பூர் நகர் நிகாம் (கிரேட்டர்) மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார்

ஜெய்ப்பூர் நகர் நிகாம் (கிரேட்டர்) மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார்

கர்ப்பமாக இருந்தபோதே ஜெய்ப்பூர் MC தேர்தலில் பிரச்சாரம் செய்து வென்ற சவும்யா, தனது 'புதிய வயது பெண்' ('new-age woman') மனப்பான்மைக்காக சமூக ஊடகங்களில் நலம் விரும்பிகளிடமிருந்து வாழ்த்து செய்திகளைப் பெற்றுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
செய்யும் வேலையில் எப்படி சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்கும் சில மக்களில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வேலையை கண்ணும் கருத்துமாக பார்க்கும் மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் ஜெய்ப்பூர் நகர் நிகாம் (கிரேட்டர்) மேயர் டாக்டர் சவும்யா குர்ஜார் வியாழக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு தனது குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்பு இரவு வரை தொடர்ந்து பணியாற்றியுள்ள செய்தி தான் இப்போது பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. 

தனியார் துறையோ அல்லது அரசு துறையோ பணியாற்றும் பெண்கள் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ள வசதியாக அரசுகளும் நிறுவனங்களும் கர்ப்பிணிகளுக்கு என்று பேறுகால விடுமுறைகளை அளிக்கிறது. அவர்களுக்கு விடுமுறை மட்டுமல்லாது வேலைகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை பார்த்துக்கொள்ளவும் அல்லது வேலைகளை கர்பிணிகளுக்கு எளிதாக்கி கொடுக்கவும் என பல வசதிகள் இப்போது இருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு என் வேலையை நான் தான் செய்வேன், நான் செய்தால் மட்டுமே அதில் எனக்கு முழு திருப்தி ஏற்படும் என்ற நோக்கில் ஜெய்ப்பூர் மேயர் தனது குழந்தையை பெற்றெடுக்கும் நிலையிலும் பல்வேறு பணிகளை இழுத்துப்போட்டு செய்துள்ளார். 

இதுகுறித்த ஒரு ட்வீட்டில், சவும்யா கூறியதாவது: "செய்யும் தொழிலே தெய்வம்! புதன்கிழமை இரவு வரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பிரசவ வலிக்கு பின்னர் அதிகாலை 12.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை கடவுளின் ஆசீர்வாதங்களுடன் நான் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தேன்," என்று சவும்யா குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானில் பதவியில் இருந்தபோது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் சவும்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 7ம் தேதி மத்திய பாஜக அலுவலகத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வந்தபோது மேயர், IANSடம் "முழுமையான கர்ப்ப காலத்தில் வேலை செய்வது உற்சாகமாகவும் சவாலாகவும் புதிய பணிகளை மேற்கொள்வது எனது எல்லா வலிகளையும் மறக்க வைக்கிறது" என்று கூறினார். 

Also read... பெண்ணின் தொப்பியை திருடி விளையாடும் யானை - இண்டெர்நெட்டை கலக்கும் வீடியோ!

அவரது கர்ப்ப காலம் முடிவடைந்து பிரசவிக்க கொஞ்ச நாட்களே இருந்தபோதும், ஜனவரி 30 அன்று "ஆயுஷ்மான் பாரத் மகாத்மா காந்தி ராஜஸ்தான் சுகாதார காப்பீட்டு திட்டம்" அறிமுகப்படுத்தலுக்கு அவர் உடனிருந்தார். மேலும் அவர் MC பட்ஜெட்டையும் வழங்கினார். அதோடு கடந்த ஒரு மாதத்தில் இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பணிகளை விடுமுறைகள் எடுக்காமல் அருகில் இருந்து முடித்து கொடுத்துள்ளார். 

கர்ப்பமாக இருந்தபோதே ஜெய்ப்பூர் MC தேர்தலில் பிரச்சாரம் செய்து வென்ற சவும்யா, தனது 'புதிய வயது பெண்' ('new-age woman') மனப்பான்மைக்காக சமூக ஊடகங்களில் நலம் விரும்பிகளிடமிருந்து வாழ்த்து செய்திகளைப் பெற்றுள்ளார். இந்த உலகம் பெண்களின் கையில் என்பதற்கு இணையாக சவும்யா போன்ற கடமை தவறாத மேயர்களும் நாட்டில் இருந்து கொண்டுதான் வருகிறார்கள். உண்மையில் சவும்யாவின் இந்த செயல் இனிவரும் காலங்களில் ட்ரெண்ட்டாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mayor

அடுத்த செய்தி