ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Twitter Trending Today : மதன் பாத்ரூமில் வழுக்கி விழுவாரா? கொண்டாடும் விஜய் ரசிகர்கள் - ட்விட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்

Twitter Trending Today : மதன் பாத்ரூமில் வழுக்கி விழுவாரா? கொண்டாடும் விஜய் ரசிகர்கள் - ட்விட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்

ட்விட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்

ட்விட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்

இன்றைய தினம் ட்விட்டரில் #ThalapathyBdayCDP , #VaathiComingHits200MViews,#FuelPriceHike,#JagameThandhiram போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  இன்றைய தினம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹாஷ்டேக் #JagameThandhiram. நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.

  ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்., இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

  190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று தனுஷ் ரசிகர்கள் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

  இணையமே கொண்டாடும் ஹேஷ்டேக் ஒன்று இன்று வைரலாகி உள்ளது. பெண்களையும், பள்ளி சிறுமிகளையும் ஆபாச வசை பாடிய பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரியில் கைது செய்யப்ட்ட யூடியூபர் பப்ஜி மதன் காவல்துறை காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூஸ் 18 தமிழ்நாடு, ஆபாச பேச்சு யூடியூபர் மதன் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.

  அதன் அடிப்படையில் அதிகரித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிறிய வீட்டில் யூடியூபர் பப்ஜி மதன் தலைமறைவாக இருந்த போது போலீஸ் கைது செய்தனர்.இவரது கைது குறித்து பலரும் கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனா...வினை விதைத்தவன் வினை அறுப்பான் என பதிவிட்டு வருகின்றனர்.

  அடுத்தாக இன்றைய தினம் ட்ரெண்டில் இடம் பிடித்திருக்கும் ஹேஷ்டேக் #FuelPriceHike .பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் இணையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்த கார்ட்டூன்களும் இணையத்தில் வைரலாகின்றது.

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக் #VaathiComingHits200MViews. ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூ-ட்யூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக் #ThalapathyBdayCDP. நடிகர் விஜயின் பிறந்த நாள் இந்த மாதம் 21ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

  அதனை சிறப்பிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.

  விஜயின் போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள், மற்றும் அவரின் வசனங்களை தற்போது இருந்தே இணையத்தில் பதிவிட்டு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Twitter