Fact Check : இறுதியாக ஜாக் மா கிடைத்து விட்டார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோவின் உண்மை தன்மை என்ன?

Fact Check : இறுதியாக ஜாக் மா கிடைத்து விட்டார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோவின் உண்மை தன்மை என்ன?

ஜேக்மா

பார்ப்பதற்கு அச்சு அசலாக உருவத்தில் ஜாக் மா போன்றே உள்ள நபர் ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். சீன தொழிலதிபர் ஜாக் மா வை உலகமே அவரை தேடிக்கொண்டிருக்க ஏ.சி பழுது பார்க்கும் நபர் ஒருவர் உருவத்தில் ஜாக் மா போன்றே இருப்பது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • Share this:
  சீன தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) 2 மாதங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் எங்கு இருக்கிறார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, அவர் மாயமாகி விட்டாரா? தலைமறைவா என்றெல்லாம் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சீன வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டிக்கடைகளை விட, அடகுக் கடைகளை விட மோசமாக செயல்படுவதாக கடும் விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.

  இதனால் அவருக்கும் அதிபர் ஷீ ஜின்பிங்குக்கும் இடையே பனிப்போர் உருவானது. அதன் பிறகு உலகம் உண்மையில் ஜாக் மா எங்கே? என்ற கேள்வியை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் ஜாக் மா போன்ற உருவத்தோற்றம் கொண்ட நபர் ஒருவர் இணையத்தில் பலரது கவனம் பெற்று வைரலாகி வருகின்றார்.

  ஒடிசாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்கூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் குளிர் சாதன பெட்டியின் கோளாறை சரி செய்யும் நபர் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜாக் மா போன்றே உள்ளார். இறுதியாக ஜாக் மா கிடைத்துவிட்டார் என அவர் பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ இணையவாசிகள் இடையே அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது

         

      

  இந்த வீடியோ ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வெளியான வீடியோ. சீனாவை சேர்ந்த இந்த மனிதர் பார்ப்பதற்கு ஜாக் மா போலவே உள்ளதாக பலரும் இவர் குறித்து 2018ம் ஆண்டே பலரும் பேசிவந்தது குறிப்பிடத்தக்கது. இவர் குறித்து இணையதள செய்தி சேகரிக்கும் நிறுவனங்களும் அந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்து. தற்போது ஜாக் மாவின் தேடுதலில் இணையத்தில் இவர் சிக்கி வைரலாகி வருகின்றார்.

  1964 செப்.10ம் தேதி ஹாங்சுவில் ஜாக் மா பிறந்தார், சிறுவயதிலேயே ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாக் மா ஆங்கில ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கினார்.

  1994ம் ஆண்டு இண்டர் நெட் வந்த காலத்தில் ஹாங்சு ஹய்பு என்ற மொழிமாற்ற ஏஜென்சியைத் தொடங்கினார். 1995-ல் சீனா எல்லோ பேஜ் இணையதளத்தைத் தொடங்கினார். 1999-ல் தன் அபார்மெண்டில் நண்பர்களுடன் பலருடன் அலிபாபா ஆன் லைன் வர்த்தகத்தைத் தொடங்கினார்.

  2003-ல் டாய்பாய், அலிபே ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனம் தொடக்கம். 2012-ல் அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெரிய ஜெயண்ட் நிறுவனமாக உருவாகி, அதன் வர்த்தகம் ரூ.11.29 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2014-ல் அலிபாபா பங்குகளின் விலை நியூயார்க் பங்குச் சந்தையில் கொடிக்கட்டிப் பறக்க போர்ப்ஸ் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

  2015-ல் பிசினஸ் ஸ்கூல் தொடங்கினார். 2016-ல் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம், சொத்து மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் முன்பு ஜாக் மாவைச் சந்தித்தார். ஜாக் மாவைப் புகழ்ந்து பேசியுள்ளார் ட்ரம்ப்.

  கடந்த ஆண்டு கோங் ஷோ தாவோ எனும் குங்-பூ குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தாய்-சி எனும் சீன தற்காப்பு கலையை பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எங்கே, ஏன் பொதுவெளியில் தலைக்காட்டுவதில்லை என்ற கேள்வி உலகம் முழுதும் இன்று அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
  Published by:Sankaravadivoo G
  First published: