பணமழை! எங்கெங்கும் பறந்த பணம்... ச்சே.. இந்த ரோட்டுல நான் போயிருந்தா இந்நேரம் பணக்காரன்

Web Desk | news18
Updated: July 11, 2019, 5:55 PM IST
பணமழை! எங்கெங்கும் பறந்த பணம்... ச்சே.. இந்த ரோட்டுல நான் போயிருந்தா இந்நேரம் பணக்காரன்
ஜார்ஜியாவில் பண மழை
Web Desk | news18
Updated: July 11, 2019, 5:55 PM IST
பண மழை பெய்கிறது என்றால்  நம்புவீர்களா..? ஆம். நம்பியே ஆகவேண்டும். அமெரிக்காவில் நிஜமாகவே பணமழை பெய்துள்ளது.


ஆச்சரியப்படாமல் அடுத்து படியுங்கள்.
அமெரிக்காவில்  உள்ள  ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் சில நாட்களுக்கு முன் சாலையில் பணம் பறந்துகொண்டிருந்தது. சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் சற்று ஆச்சரியமாகதான் பார்த்துள்ளனர். நம்பமுடியவில்லை பணமழை  பெய்துகொண்டிருப்பதை பார்த்து சாலைகளில் தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை பொறுக்கிகொண்டனர்.

இந்த தகவல் போலீஸுக்கு சென்றுள்ளது. உடனே விரைந்த போலீசார், பணம் சிதறிக்கிடப்பதை பார்த்து விசாரணையில் இறங்கினர்.

Loading...

அவ்வழியாக சென்ற ட்ரக் ஒன்றில் இருந்து பணம் சிதறியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.  $175,000  அமெரிக்க டாலர் பணம் பறிபோயுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹1.2 கோடியாகும்.

மேலும்,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பண மழை காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவ தொடங்கியது. நிறைய பேர் தாங்கள் அந்த இடத்தில் இல்லையே என்று ஆதங்கப்பட்டு பதிவுகள் இட்டுள்ளனர்.

ச்சே.. இந்த ரோட்டுல நான் போயிருந்தா இந்நேரம் பணக்காரன் ஆகியிருப்பேன் என்றும் பதிவுகள் பறக்கின்றன.

Dunwoody police tell me so far 2 people have returned money they picked up on 285 yesterday. One bag had approximately $600. The other has around $2100. Both people said they saw the department's post and it didn't sit well with them to keep the money. #11Alive pic.twitter.com/qtkEa1MV6eAlso Watch: காபி, டீ அடிக்கடி அருந்துவது சரியா? மருத்துவர் கூறுவது என்ன?
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...