உங்கள் வசதியைக் காட்டுவதற்கான நேரம் இது இல்லை. இங்கே பார்ட்டி நடக்கவில்லை - ஃபரா கான்

இது உலகம் முழுவதும் நடக்கு பார்ட்டி அல்ல, உலகப் பெருந்தொற்று. உங்களுக்கு வாய்த்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வைக் காட்டுவதற்கான நேரம் இது இல்லை என்று பேசியிருக்கிறார் ஃபரா கான்

உங்கள் வசதியைக் காட்டுவதற்கான நேரம் இது இல்லை. இங்கே பார்ட்டி நடக்கவில்லை - ஃபரா கான்
ஃபரா கான்
  • Share this:
”இது உலகம் முழுவதிலும் நடக்கும் பார்ட்டி அல்ல, உலகத்தின் பெருந்தொற்று. அதனால் நடிகர்கள் வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான ஃபரா கான்.

உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக, 21 நாட்கள் தேசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றனர். நோயைத் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது தவிர்க்க முடியாத நடவடிக்கை என்றாலும், நாள்தோறும் இந்த ஊரடங்கின் மூலமாக இழந்த வாழ்வாதாரத்தின் காரணமாக பல ஏழைக்குடும்பங்கள் பசியால் வாடி வருகின்றனர்.

மார்ச் 26-ஆம் தேதி ஃபரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், “வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிடும் பாலிவுட் நடிகர்களுக்கு எந்தவிதமான வேலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பலருக்கும் இப்போது தொற்றி வரும் நோய் குறித்த கவலைகள் ஏராளமாக உள்ளது. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நீங்கள் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்” என்று கோபமாக பேசியிருந்தார்.

சமீபத்தில் சினிமா பத்திரிக்கையாளர் ராஜீவ் மஸந்துடனான வீடியோ உரையாடலில், “நான் கோபமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் வொர்க் அவுட் செய்யுங்கள். நான் இந்த சூழ்நிலையின் தீவிரம் அறியாமல் இருந்த செயல்பாடுகளுக்காக அப்படி பேசியிருந்தேன். ஆனால் ஒன்றைச் சொல்ல நினைக்கிறேன். இது உலகம் முழுவதும் நடக்கு பார்ட்டி அல்ல, உலகப் பெருந்தொற்று. உங்களுக்கு வாய்த்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வைக் காட்டுவதற்கான நேரம் இது இல்லை. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் பல மைல் தூரம் நடந்து செல்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த வசதியைக் காட்டுவது வன்மமானது” என்று கூறியுள்ளார்.

கத்ரீனா கஃப், அர்ஜுன் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், சாரா அலிகான், மலைகா அரோரா, ராகுல் ப்ரீத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா  ஆகியோர் தங்களின் வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading