கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் டேட்டிங் ஆப்ஸ்கள்...

டேட்டிங் ஆப்

"ஆரம்பத்தில், இந்த கொரோனா நெருக்கடி கடந்துவிடும் என்று நான் நம்பினேன், பிறகு கொஞ்சம் பொறுமை காத்தேன், ஆனால் நிலைமை நீண்டு கொண்டே சென்றது. இதுபோன்றதொரு நிலையில் நீங்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்," என்று கூறினார்.

  • Share this:
டேட்டிங் ஆப்ஸ்கள் ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வருகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...! கொரோனா வைரஸ் மில்லியன் கணக்கானவர்களுக்கு தனிமையை அளித்துள்ள நிலையில் மக்கள் ஒன்றாக கூட வாய்ப்புள்ளதா?... 18 வயதான ரோட்ரிகோ, கொரோனாவிற்கு முன் டேட்டிங் ஆப்ஸில் சேர நினைத்ததில்லை, ஆனால் ஊரடங்கால் ஏற்பட்ட வெறுமை இறுதியாக அவரை டேட்டிங் ஆப்ஸில் சேர வைத்துவிட்டது. "ஆரம்பத்தில், இந்த கொரோனா நெருக்கடி கடந்துவிடும் என்று நான் நம்பினேன், பிறகு கொஞ்சம் பொறுமை காத்தேன், ஆனால் நிலைமை நீண்டு கொண்டே சென்றது. இதுபோன்றதொரு நிலையில் நீங்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இப்போது ஸ்கூலில் பாடங்கள் பெரும்பாலும் ஆன்லைனில் எடுக்கப்படுகிறது. நண்பர்களுடன் வெளியே செல்வதும் குறைவு தான். "எனது முழு தினத்தையும் எனது பெற்றோருடன் செலவிடுவது போன்ற உணர்வு எனக்கு இருந்தது." ரோட்ரிகோ இப்போது ஒவ்வொரு நாளும் டேட்டிங் ஆப்ஸை பயன்படுத்துகிறார். ஹூக்-அப்ஸை விட, டேட்டிங் ஆப்ஸ்கள் வெறுமனே ஹேங்கவுட் செய்வதற்கான இடமாக மாறிவிட்டன. ஆப்ஸில் தினமும் பலருடன் சாட் செய்வதால் தனது வயதுடைய நான்கு நபர்களை இப்போது நான் ப்ரண்டாக வைத்துள்ளேன் என்றார். தொற்றுநோயின் "மன அழுத்தத்தையும் விரக்தியையும் போக்க" இது ஒரு நல்ல வழி என்று அவர் கூறுகிறார்.

கடந்த மாதம் போர்ச்சுகலில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் "இதோடு நம் பிணைப்பு முடிந்துவிடும்" என்று அவர் பெருமூச்சு விட்டார். டிண்டர், கீல் மற்றும் மீடிக் போன்ற பல முன்னணி ஆப்ஸ்களை உள்ளடக்கிய குழு தான் Match, 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூசர்களைச் சேர்த்துள்ளதாகக் இந்த Match ஆப்ஸ் கூறுகிறது.

"இது ஒரு மனபிராந்தி போல் தெரிகிறது, ஆனால் என்னை பொறுத்தவரையில் நான் இந்த ஆப்ஸ்களில் மூழ்கி இருக்கவில்லை" என்று பிரான்ஸ் நாட்டை சார்ந்த 19 வயதான செபாஸ்டியன் கூறினார்.

"கொரோனா ஊரடங்கால், கல்லூரி, பார்கள், ரெஸ்டாரென்ட்கள் மற்றும் சினிமாக்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்தது, இந்த நேரங்களில் நாங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். இது உண்மையில் கொடூரமானது" என்று அவர் கூறினார்.

டேட்டிங் பற்றி...!

வீடியோ சாட்களுக்குச் செல்வதற்கு முன்பு எக்ஸ்செஞ்கள், டெக்ஸ்ட் செய்வதன் மூலம் தொடங்கவேண்டும் என்பதில் டேட்டிங் ஆப்ஸ்கள் அதிக அளவில் கவனம் செலுத்துகின்றன. ஏனெனில் இந்த தொற்றுநோயின்போது பிஸிக்கல் டச் இருக்கக்கூடாது என்பதற்காக இம்முறையில் பல ஆப்ஸ்கள் கவனம் செலுத்தியது. மார்தா, 41 வயதான லண்டன் பெண்மணி, ஜூம் டேட்டிங் ஆப்ஸால் சோர்ந்துதான் போனார், பர்ப்பியும்கள் இல்லாவிட்டாலும் வேறு சில காரணங்களால் தான் சோர்ந்துபோனதாக அவர் கூறியுள்ளார்.

"ஜூம் டேட்டிங் மூலம் நான் கண்ட மிகப்பெரிய சவால் என்னவென்றால்... நீங்கள் பேசுவதையும் சிரிப்பதையும் நீங்களே பார்ப்பது எவ்வளவு விசித்திரமானது" என்று அவர் கூறினார். (கொரோனா ஊரடங்கால் ஜூம் டேட்டிங் ஆப்ஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டது) மக்கள் தங்களுக்கு பொருத்தமான Mr அல்லது Mrsஐ சந்திப்பதில் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தொற்றுநோய் இருக்கக்கூடும் என்று அவர் சந்தேகிக்கிறார். "நான் எப்படி என்னவர்களை சந்திக்க போகிறேன் என்று தெரியவில்லை, ஆனால் ஒரு நாள் சந்திப்பேன் என்று என்னை நானே ஊக்கப்படுத்தி வருகிறேன். நான் உண்மையில் ஒரு ஊர் சுற்றி, ஒரு இடத்தில் அமர மாட்டேன் பலருடன் பழகுவது எனது இயல்பு என்றார்.

வல்லாடோலிடியைச் சேர்ந்த ஸ்பானியரான 31 வயதாகும் அனா, டிண்டரில் 24 மணி நேரத்தில் ஒருவரைக் கண்டுபிடித்தார். பின்னர் அவர்கள் ஒரு ஜோடியாகவே மாறிவிட்டனர். "2020 ஆம் ஆண்டின் இறுதியில், சில நாட்கள் டேட்டிங்கிற்கு முயற்சித்துப் பார்க்கும்படி என்னை நானே சமாதானப்படுத்தினேன், அப்போதுகூட பழைய மாதிரி வெறும் உரையாடல்கள் எனக்கு கிடைத்தால் அதையும் அப்படியே விட்டுவிடுவேன் என்றும் நான் சபதம் செய்திருந்தேன்" என்றார் அவர்.

உலகின் மறுபக்கமான டோக்கியோவில், மொழிபெயர்ப்பு வேலையை செய்துவரும் 32 வயதான அம்ப்ரோஸுக்கு இதுவரை அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை போலும். டேட்டிங் ஆப்ஸில் சரியானவரை கண்டுபிடிக்க அதிக சிரமப்படுவதாக அவர் கூறுகிறார். "நான் நேரில் சந்திப்பதை பெரும்பாலும் விரும்ப மாட்டேன், சரியானவரை கண்டுபிடிக்க டிண்டர் எனக்கு ஒரு பிளாட்பார்மை வழங்கி இருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு புதியவர்கள் அப்படியே சென்று விட்டார்கள்" என்று அவர் கூறினார் மேலும் எனக்கு ஆன்லைனில் அன்பை கண்டுபிடிப்பதில் நம்பிக்கை இல்லை, அதேபோல் நிஜ வாழ்க்கை பற்றியும் எந்த நம்பிக்கையும் என்றார். நான் என் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்கிறேன். மேக்கப் இல்லாமல் வசதியான உடைகளை அணிந்து கொள்கிறேன், ஏனெனில் இதுதான் பேன்டமிக் ஃபேஷன்!" என்றார்.

கொரோனா அச்சத்தில் உலகில் பலரும் அஞ்சி நடுங்கி வரும் வேளையில் பலர் இந்த ஊரடங்கை வித்தியாசமாக பயன்படுத்தி வருகின்றனர். வயது வித்தியாசம் பாராமல் பலரும் இந்த டேட்டிங் ஆப்ஸ்களில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Arun
First published: