ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

30 நொடிக்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் அமர்ந்திருக்கு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

30 நொடிக்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் அமர்ந்திருக்கு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

Trending

Trending

Optical Illusion | இந்தப் புதிரை 30 வினாடிகளுக்குள் தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?. அப்படி எத்தனை ஆந்தைகள் மறைந்திருக்கின்றன என்பதை அரை நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிப்பது, ஒரு உருவத்திற்குள் பல உருவங்களை பதுக்கிவைப்பது, ஆளுமை திறனை சோதிப்பது, ‘இருக்கு ஆனா இல்ல’ என குழம்ப வைப்பது என நெட்டிசன்கள் பலரையும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன.

புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரயங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற நல்ல ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக உள்ளதால் நெட்டிசன்கள் பலருக்கும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

30 விநாடிகளுக்குள் இந்த படத்தில் உள்ள மரத்தில் மொத்தம் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்ற சவால் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இந்தப் புதிரை 30 வினாடிகளுக்குள் தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?. அப்படி எத்தனை ஆந்தைகள் மறைந்திருக்கின்றன என்பதை அரை நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் மொத்தம் 3 ஆந்தைகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதில் முதல் இரண்டு ஆந்தைகளை பலரும் கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால் கடைசி ஆந்தையை தான் கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திக்குமுக்காடி வருகின்றனர். சொற்ப சதவீதம் பேர் மட்டுமே மொத்த எத்தனை ஆந்தைகள், எங்கே அமர்ந்திருக்கின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனராம். நன்றாக உற்றுப்பாருங்கள், நிறைய கிளைகள் மற்றும் இலைகள் கொண்ட இந்த மரத்தின் மீது 3 ஆந்தைகள் அமர்ந்திருக்கின்றன என தெரிகிறதா.? உடனே கண்டுபிடித்து நீங்களும் அந்த சொற்ப சதவீத புத்திசாலிகள் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்.

Also Read : பள்ளிக்கு சென்று பார்வையற்ற மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை - மகனின் சந்தோஷத்தை பாருங்க!

எவ்வளவு முயன்றும் ஒன்றைத் தவிர பிற ஆந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லையா?, சரி விடுங்கள் விடையை அறிய நாங்கள் உதவுகிறோம். இந்த மரத்தில் மொத்தம் 3 ஆந்தைகள் இருக்கிறது என கூறியிருந்தோம். அவை எங்கே, எந்த இடத்தில் அமர்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்டு காட்டப்படும் படத்தை கீழே பாருங்கள்.

குழப்பமான அதே நேரத்தில் சுவாரஸ்யமான இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். அவர்களையும் 30 விநாடிக்குள் ஆந்தைகளை கண்டுபிடிக்கச் சொல்லி சவால் விடுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உடனே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள போட்டோவை பகிர்ந்து அவர்களுக்கு நீங்கள் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.

First published:

Tags: Optical Illusion, Trending