Egyptian Mummy: 3000 ஆண்டுகள் பழமையான மம்மியின் ரகசியங்களை அறிய சி.டி ஸ்கேன் பயன்படுத்தும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள்!

சி.டி. ஸ்கேன் செய்யப்படும் எகிப்திய மம்மி

சிடி ஸ்கேன் (Computed Tomography scan) ஒருமுறை எடுப்பது சுமார் 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம்.

  • Share this:
பழங்கால எகிப்திய மம்மி குறித்த மேலும் பல ரகசியங்களை கண்டறிய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். மம்மிக்களின் ரகசியங்களைக் கண்டறியும் ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சி.டி ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்திய மம்மியை சி.டி. ஸ்கேன் இயந்திரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர்.

இதற்காக பண்டைய எகிப்திய மனிதரான (துறவி) அங்கேகோன்சுவின் (Ankhekhonsu) பதப்படுத்தப்பட்ட உடலான மம்மி, பெர்கமோவின் சிவிக் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் (Bergamo’s Civic Archaeological Museum) இருந்து, மிலனின் பாலிக்ளினிகோ மருத்துவமனைக்கு (Policlinico hospital) மாற்றப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் (Computed Tomography scan) ஒருமுறை எடுப்பது சுமார் 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். CT ஸ்கேனில் மனித உடலின் குறுக்குவாட்டில் உள்ள பகுதிகளில் ஊடுகதிர்களை செலுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எக்ஸ்ரேவை விட அதிக தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதில் 2டி முறையில் உடலின் பாகம் காட்டப்படுகிறது. இந்த சிடி ஸ்கேன் ஆராய்ச்சி மூலம் வல்லுநர்கள் அங்கேகோன்சுவின் வாழ்க்கை முறை மற்றும் கிட்டத்தட்ட சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பழக்கவழக்கங்கள் குறித்து பல தகவல்களை ஆய்வு செய்து கண்டறிய உள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மம்மி திட்ட ஆராய்ச்சி இயக்குனர் சபீனா மல்கோரா (Sabina Malgora), நடைமுறையில் மம்மிக்கள் ஒரு உயிரியல் அருங்காட்சியகம். அவை டைம் காப்ஸ்யூல் போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்கேகோன்சு மம்மியின் பெயர் கண்டறியப்பட்டது பற்றி தகவல் தெரிவித்த சபீனா மல்கோரா, கிமு 900 முதல் 800 வரை தேதியிட்ட சர்கோபகஸிலிருந்து (sarcophagus- ஒரு கல் சவப்பெட்டி) இந்த மம்மியின் பெயரை கண்டறிந்ததாக கூறினார். அதில் 'கடவுள் கோன்சு உயிருடன் இருக்கிறார்' (god Khonsu is alive) என்று பொருள்படும் படியான வார்த்தைகள் ஐந்து முறை எழுதப்பட்டிருந்தது என்றார்.

Also read... வேறொரு பெண்ணுடன் காதல் - திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்!

இந்த சிடி ஸ்கேன் ஆராய்ச்சி மூலம் எகிப்திய துறவியான அங்கேகோன்சு வாழ்க்கை முறை மற்றும் மரணம் பற்றிய ஏராளமான தகவல்களை புனரமைக்க முடியும் மற்றும் அவரது உடலை மம்மியாக்க எந்த வகையான தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்கால நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு பண்டைய காலத்து நோய்கள் மற்றும் காயங்களை பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. கடந்த கால புற்றுநோய் அல்லது தமனி பெருங்குடல் அழற்சியை குறித்து நமக்கு தெரிய வரலாம். அப்படி தெரிய வந்தால் இது நவீன ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி உள்ளார் சபீனா மல்கோரா.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: