ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சொத்தை விற்று விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருந்த ஊழியருக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்

சொத்தை விற்று விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருந்த ஊழியருக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்

அமேசான்

அமேசான்

ஊரில் சொத்தை விற்று ஐரோப்பாவுக்கு செல்லத் தயாரான ஊழியருக்கு நிகழ்ந்த சம்பவம் குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் பட்டியலில் அமேசானும் இணைந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதில் கென்யாவை சேர்ந்த அமேசான் ஐடி ஊழியர் ஒருவர் ஐரோப்பாவிற்கு மாற்றல் வழங்கப்பட்டு இருக்கிறார். வேறு நாட்டுக்கு குடிபெயரயிருந்த நிலையில், இவரது வேலை பறிபோனது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கென்யாவில் தனது வீடு கார் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஐரோப்பாவிற்கு செல்ல தயாராக இருந்தவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பணி நீக்கம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் டாம் போயா ஒபியோ என்ற கென்யாவைச் சேர்ந்த மென்பொருள் பணியாளர் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பற்றி அவர் லிங்க்ட்இன் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“நிறுவனத்தின் வருடாந்திர ஆப்பரேட்டிங் மதிப்பாய்வின் அடிப்படையில் பலவிதமான வணிக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில் என்னுடைய வேலையும் பறிபோய் இருக்கிறது. கடந்த வாரம் தான் நான் கென்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லப் போகிறேன் என்பதை பற்றி உற்சாகமாக பகிர்ந்தேன். ஆனால் தற்போது பணி நீக்கம் காரணமாக எனக்கும் வேலை பறிபோய் விட்டது” என்று அவர் வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.

ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து அமேசான் நிறுவனத்தின் ஐரோப்பா கிளையில் பணியில் சேர கூறிய அவருக்கு, 12 ஆம் தேதி பணி நீக்க ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

Also Read : அரிசியை விட மிகச் சிறிய அளவில் மர ஸ்பூன் - கின்னஸ் சாதனை படைத்த இந்திய சிற்பி!

டாம் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமே இது செய்தியை கேட்டு மனம் உடைந்து போயுள்ளது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை, இவரது மொத்த குடும்பமே இந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று தயாராகிக் கொண்டு வந்திருந்த நிலையில், தற்போது வேலை இழப்பு மட்டுமல்லாமல், ஊரில் இருந்த சொத்துக்களும் விற்பனை செய்துவிட்டார் என்பது வருத்தத்திற்குரியது.

இந்த அதிர்ச்சியை எதிர்கொள்வதற்கு இவர் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமே கவுன்சிலிங் தெரபியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கமே உலகம் முழுவதும் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக தொடங்கி உள்ளது. 91 நிறுவனங்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் இது தொடரும் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: Amazon, Unemployment