ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஐடி ஊழியர்கள் எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்க கூடாதா? - வைரலாகும் வீடியோ..!

ஐடி ஊழியர்கள் எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்க கூடாதா? - வைரலாகும் வீடியோ..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் ஈபிஎஃப்ஓ நிதி உள்பட வேறுசில விஷயங்களை மையமாக வைத்து, மூன்லைட்டிங் செய்கின்ற பணியாளர்களை கண்டறிந்த விப்ரோ நிறுவனம், அண்மையில் அவர்களை கொத்தாக பணிநீக்கம் செய்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு மருத்துவமனை அல்லது பெரும் தனியார் மருத்துவமனையில் முழு நேர ஊழியராக பணிபுரியும் மருத்துவர், தனது வீட்டுக்கு அருகாமையில் பகுதிநேர தொழிலாக ஒரு கிளினிக் நடத்துவதை பார்த்திருப்பீர்கள். அதேபோல, அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை, மாலை வேளைகளில் டியூசன் சென்டர் நடத்துவது வெகு இயல்பான விஷயம் தான்.

தங்களுடைய சம்பளத்தை தாண்டியும் கூடுதலாக இவர்கள் வரும் வருமானம் பார்ப்பது விமர்சனத்திற்கு உரியதாக இருந்தாலும், வெகுகாலமாக அது நடைமுறையில் இருக்கின்ற ஒன்றுதான். இதேபோலத் தான் பல்துறை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், ஐடி துறையில் இந்த எக்ஸ்ட்ரா வருமானம் என்ற கலாச்சாரம் பெரிய அளவுக்கு இல்லை. ஏனெனில் இருக்கின்ற வேலைப்பளுவை சமாளிப்பதே போதுமானதாக இருந்து வந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரவலாக அறிமுகமாகிய வொர்க் ஃபிரம் ஹோம் பணி முறையில், எல்லாம் மாறத் தொடங்கியது.

Read More : டிவிட்டரில் மீண்டும் வேலைக்கு கூப்பிட்டாலும் போக விரும்பல - முன்னாள் ஊழியர்கள் திட்டவட்டம்!

வீட்டில் இருந்தபடி 8 மணி நேரம் பணி செய்தது போக, எஞ்சியுள்ள நேரத்தில் சிலர் வேறு நிறுவனங்களில் பகுதிநேரமாக வேலை செய்யத் தொடங்கினர். சிலர் ஒரே சமயத்தில் கூட இரண்டு நிறுவனங்களின் வேலையை சமாளித்து செய்து வருகின்றனர். இந்த எக்ஸ்ட்ரா பணி முறையை ஐடி துறையில் மூன்லைட்டிங் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, மேற்பட்ட நிறுவனங்களில் பணி செய்வது என்று சொல்லலாம்.

சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் ஈபிஎஃப்ஓ நிதி உள்பட வேறுசில விஷயங்களை மையமாக வைத்து, மூன்லைட்டிங் செய்கின்ற பணியாளர்களை கண்டறிந்த விப்ரோ நிறுவனம், அண்மையில் அவர்களை கொத்தாக பணிநீக்கம் செய்தது. இதற்கு ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதேசமயம், இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ ஒன்றை அவர் தற்போது ஷேர் செய்துள்ளார். அதில், பேசுகின்ற நபர், “கிரிக்கெட் வீரர்கள் அரசு வேலைகளில் இருக்கலாம். டாக்டர்கள் கிளினிக் நடத்தலாம். ஆசிரியர்கள் டியூசன் சென்டர்கள் நடத்தலாம். பெரும் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் பிற நிறுவனங்களுக்கான ஆலோசகர்களாக செயல்படலாம்.

ஆனால், கீழ்நிலையில் உள்ள பணியாளர்கள் மூன்லைட்டிங் முறையில் பணி செய்யக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோவை பகிர்ந்துள்ள ஹர்ஷ் கோயங்கா, இதுவும் பரிசீலனைக்கு உரியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் திறமை, பணி அனுபவம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகின்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சின்ன நிறுவனங்கள் அவர்களை மூன்லைட்டிங் வகையில் பயன்படுத்திக் கொள்கிறது.ஆனால், விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி இதை கடுமையாக கண்டித்து வருகிறார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறுகிய கால லாபத்தை கணக்கிட்டு மூன்லைட்டிங் முறையை ஊக்குவிக்கக் கூடாது என்றும், நீண்டகால மற்றும் நிலையான நலன்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Job, Trending, Viral