Home /News /trend /

டேட்டூ குத்துற இடமாய்யா இது - வலியுடன் வந்தவரை பார்த்து பதறி போன மருத்துவர்

டேட்டூ குத்துற இடமாய்யா இது - வலியுடன் வந்தவரை பார்த்து பதறி போன மருத்துவர்

அந்த இடத்தில் டேட்டூ..

அந்த இடத்தில் டேட்டூ..

Trending | மருத்துவப் பணி என்பது வெறுமனே பணம் ஈட்டக் கூடிய தொழில் அல்ல. இந்தத் தொழிலில் வழக்கமான ஆர்வம், ஈர்ப்பு ஆகியவை மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மை, மிகுந்த கவனம் போன்றவையும் தேவைப்படும்.

மருத்துவப் பணி என்பது வெறுமனே பணம் ஈட்டக் கூடிய தொழில் அல்ல. இந்தத் தொழிலில் வழக்கமான ஆர்வம், ஈர்ப்பு ஆகியவை மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மை, மிகுந்த கவனம் போன்றவையும் தேவைப்படும். அதிலும் மருத்துவப் பணி தினசரி புதுப்புது சவாலை எதிர்கொள்ளும் வகையில் அமையும்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நோயாளிகள், அவர்கள் சொல்லும் புதுப்புது அறிகுறிகள் போன்றவற்றை பரிசீலனை செய்து சரியான மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்ய வேண்டும். அதே சமயம், இதுவரையிலும் பார்த்திராத புதுமையான அறிகுறியுடன் நோயாளி வந்தார் என்றால் மருத்துவரின் புத்திகூர்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்துவிடும்.

அப்படியொரு அனுபவம் அண்மையில் பணியில் இருந்த மருத்துவருக்கு ஏற்பட்டிருக்கிறது. பெஞ்சமின் ஸ்ச்மிட் என்ற மருத்துவர், தான் பணியில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து டிக் டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆணுறுப்பில் வலியுடன் வந்த நபர்

அமெரிக்காவின் மிசௌரி மாநகரில் இந்த மருத்துவர் பணி செய்து வருகிறார். இவரிடம் நோயாளி ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பில் மிகுந்த வலி இருப்பதாகக் கூறி சிகிச்சை பெற வந்தார். குறிப்பாக சிறுநீர் கழிக்கும் போது முதுகுவலி மற்றும் ஆணுறுப்பில் வலி போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார்.

Read More : என் கடைசி ஆசையை நிறைவேற்றினால் தான் சொத்து... மகளுக்கு அப்பா வைத்த செக்!


சிறுநீர் கழிக்கும்போது சில நபர்களுக்கு இதுபோன்ற வலி ஏற்படுவது இயல்பானதுதான் என்று கருதிய மருத்துவர் பெஞ்சமின், நோயாளியை நேரடி பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு கோரினார். இதற்கு நோயாளியும் ஒப்புதல் கொடுத்த நிலையில், அவரது பிறப்புறுப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றதா என்பதை மருத்துவர் பரிசோதனை செய்யத் தொடங்கினார்.

ஆனால், அதற்கு அடுத்து நடக்க இருந்த விஷயத்தை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதாவது, நோயாளியின் ஆணுறுப்பில் கரும்புள்ளி ஒன்று தென்படுவதைக் கண்டு மருத்துவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், “அந்த நபரின் பிறப்புறுப்பில் ஒரு கரும்புள்ளி இருப்பதை நான் பார்த்தேன். இதுகுறித்து அந்த நபரிடம், இதுபோன்ற கரும்புள்ளியை நீங்கள் இதற்கு முன்னால் பார்த்தது உண்டா என கேள்வி எழுப்பினேன்’’ என்று கூறினார்.

டேட்டூ குத்தியிருக்காராம்

நோயாளி பதில் அளிக்கும் முன்னே மருத்துவரின் சிந்தனை பலவாறாக குழம்பிக் கொண்டிருந்தது. ஏனென்றால் தன்னுடைய அனுபவத்தில் இதுபோன்ற புள்ளியை அவர் கண்டதில்லை. இது ஏதேனும் ஒரு புதுவித நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் இருந்தபோது, நோயாளி தெரிவித்த பதிலைக் கேட்டு அவர் ஒருநிமிடம் திகைத்துப் போனதுடன், கடகடவென சிரித்து விட்டார்.

ஆம், தேள் வடிவத்தில் டேட்டூ குத்தியிருப்பதாகவும், அதுதான் புள்ளி போல தென்படுகிறது என்றும் நோயாளி கூறினார். வியட்நாமில் இருந்தபோது இதுபோல டேட்டூ போட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நோயாளி சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலியை குணப்படுத்துவதற்கான மருந்துகளை மருத்துவர் கொடுத்து அனுப்பினார். ஆனால் மருத்துவர் பெஞ்சமினுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி