ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

13-ம் நம்பர் என்றாலே பயமா? எண் 13ல் மறைந்திருக்கும் ரகசியம் மற்றும் உண்மைகள்!

13-ம் நம்பர் என்றாலே பயமா? எண் 13ல் மறைந்திருக்கும் ரகசியம் மற்றும் உண்மைகள்!

நம்பர் 13

நம்பர் 13

Astrology and Number 13: ராகுவின் அடிப்படை தன்மைகளை தாண்டி, 13 எண்ணில் பிறந்த ஒரு நபர் கடின உழைப்பு மற்றும் திட்டமிட்டு எந்த வேலையைச் செய்தாலும் அவரை வெல்வது கடினம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  எண் 13 என்று சொன்னாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். 13 ஆம் நம்பர் வீடு பேய், ஆவி, கெட்ட சக்தி என்று அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான பல விஷயங்களுடன் தொடர்புடையது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் கூட 13 என்ற எண்ணை தவிர்த்து விடுகிறார்கள். பல நாடுகளில் வீட்டின் முகவரியில் 13 என்ற எண்  இருக்கவே இருக்காது.

  12, 12a, 14  என்ற வரிசையில் தான் இருக்கும். அந்த அளவுக்கு எண் 13 மிகப்பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  ஆனால் இவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை?  எண் 13 பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் உண்மைகள் ஆகியவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண் 13

  நம்பர் 13ன் கூட்டுத்தொகை 4. இது ராகுவின் ஆதிக்கத்தைக் கொண்ட எண்ணாகும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் தன்மைகளைப் பிரதிபலிப்பார்கள். நேரடியாக 13 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பெரிய அளவில் இருக்காது. ஆனால் கடின உழைப்பு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும். ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண்களில் ஒன்றான 13, அதிகமான தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ராகுவின் அடிப்படை தன்மைகளை தாண்டி, இந்த எண்ணில் பிறந்த ஒரு நபர் கடின உழைப்பு மற்றும் திட்டமிட்டு எந்த வேலையைச் செய்தாலும் அவரை வெல்வது கடினம்.

  13 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்

  பதின்மூன்றாம் தேதியில் பிறந்தவர்கள் மிக மிக எச்சரிக்கையாக செயல்படுவார்கள். இவர்களிடம் பிடிவாதம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். சில நேரங்களில் எதையும் பொருட்படுத்தாமல் நேர்த்தியாக ஒரு விஷயத்தை செய்தாலும், அவ்வப்போது சின்ன சின்ன விஷயங்களால் இவர்களுடைய கவனம் திசை திரும்பி விடும். காரணமே இல்லாமல் தடுமாறுவார்கள், தங்களை கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

  வீடு, அலுவலகம், வணிகம் என்று எல்லா இடங்களிலுமே அவ்வப்போது சிரமத்தை எதிர்கொள்வார்கள. மற்றவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு வினோதமான சூழ்நிலைகளை இவர்கள் கையாள வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படும்.

  இதையும் வாசிக்க: மக்களே உஷார்! - தமிழகத்தை மீண்டும் மிரட்ட போகும் மிக கனமழை!

  மற்றவர்கள் சொல்வதை கேட்காமல், மற்றவர்களுடைய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் வரை இவர்கள் வெற்றிபெறுவார்கள். மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ முடியும். அதிர்ஷ்டம் இல்லை கடின உழைப்பு தான் இவர்களுக்கானது என்று இருந்தாலும் எதிர்பார்க்காத நேரத்தில் இவர்களிடம் சொத்து குவியும் வாய்ப்பு இருக்கிறது.

  13 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான தொழில் துறை

  ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் இவர்கள் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். வேலையில் இவர்களுக்கு எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும். மீடியா, தொலைக்காட்சி, ஒப்பந்தக்காரர்கள், கட்டுமானம், காஸ் ஏஜன்சி, பங்குச் சந்தை புரோக்கர்கள், உற்பத்தி, இயந்திரங்கள், போட்டோ ஸ்டூடியோ, எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஆகிய துறைகளில் இவர்கள் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.

  இதையும் வாசிக்க: 1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்... ஸ்விட்சர்லாந்து செய்த சாதனை!

  13 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை

  அதிர்ஷ்டமான நிறம் – நீலம் மற்றும் கிரே

  அதிர்ஷ்டமான தினம் – வெள்ளி மற்றும் சனி

  அதிர்ஷ்டமான எங்கள் – 6 மற்றும் 9

  பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை கால்நடைகள் அல்லது எளியவர்களுக்கு வழங்கலாம்; செடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடலாம்;  வீடு, பணி செய்யும் இடம் ஆகியவற்றை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; ஐந்து முக ருத்திராட்சம் கொண்ட துளசி மாலையை அணிய வேண்டும்;  மது, மாமிசம், புகையிலை மற்றும் லெதர் பொருட்களை தவிர்க்க வேண்டும்;  சிவலிங்கத்துக்கு ஒவ்வொரு திங்களும் பால் அபிஷேகம் செய்யலாம்; காலையில் எழுந்த உடனேயே, உங்கள் போர்வையை மடித்து வைக்கவும்;  வீட்டுப் பணியாளர்கள், உங்களை விட எளியோரிடம் பேசும் போது மென்மையாக பேச வேண்டும்;  கோவிலில் தேங்காய் உடைத்தால் அல்லது அர்ச்சனை செய்தால், எப்போதும் இரண்டு தேங்காய்களை பயன்படுத்துங்கள்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Astrology, Lifestyle, Trending