• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இது வெங்காயமா இல்லனா கேக்கானு கண்டுபிடிங்க? வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோ!

இது வெங்காயமா இல்லனா கேக்கானு கண்டுபிடிங்க? வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோ!

இது வெங்காயமா இல்லனா கேக்கா

இது வெங்காயமா இல்லனா கேக்கா

நம் வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி விடும்.

  • Share this:
உணவு பிரியர்களுக்கு என்றே தினம்தோறும் ஏராளாமான உணவு வகைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரியாணி முதல் இனிப்பு வகைகள் வரை எண்ணில் அடங்காத வகைகள் இருக்கின்றன. இது போன்ற உணவுகள் பற்றி "ஃபூட் ரிவியூவ்" என்கிற பெயரில் யூடியூப் சேனல்களில் பல கோடி வீடியோக்கள் உள்ளன. அதே போன்று எல்லா வகையான உணவுகளையும் வீட்டிலே எளிமையாக செய்ய கூடிய யூடியூப் வீடியோக்களும் உள்ளது. இதில் நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தயாரிக்கப்படும் சில வீடியோக்கள் எப்போதும் மில்லியன் கணக்கில் லைக்குகள் பெற்று விடும்.

அதே போன்று மிக விரைவிலே இவை வைரலாகவும் தொடங்கி விடும். சமீப காலமாக சாதாரண பொருட்களை உணவு பொருட்களாக மாற்றி, வியக்க வைக்கும் சில வீடியோக்களை பார்த்திருப்போம். பொம்மைகள், வீட்டு பாத்திரங்கள், லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு பொருட்களை அசல் போன்று சாக்லேட் அல்லது கேக் பயன்படுத்தி செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும் இந்த வித்தியாசமான முயற்சிகளை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடங்கங்களில் பார்க்கலாம்.

நம் வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி விடும். இதே போன்று நடாலி சைட்செர்ஃப் என்கிற உணவு கலைஞர் எல்லாவித வீட்டு பொருட்களையும் கேக் வடிவத்தில் செய்து அசத்தி வருகிறார். இவை பார்ப்பதற்கு அசலான பொருள் போன்றே இருக்கும். ஆனால் இவற்றை வெட்டினால் தான் தெரியும் இவை கேக் என்பதே!

அந்த அளவிற்கு கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாதவாறு நடாலி தனது ஸ்பெஷல் கேக்குகளை செய்து வருகிறார். இவரின் கேக்குகள் 2020 ஆம் ஆண்டில் இருந்து வைரலாகி வருகிறது.சமீபத்தில் இவர் செய்த வெங்காய கேக் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த கேக் பார்ப்பதற்கு வெங்காயத்தை போன்றே காட்சி தருகிறது. மேலும் இதில் அவர் செய்துள்ள வெங்காய தோலும் அசல் வெங்காயத்தை போலவே இருக்கிறது. முதன்முதலில் பார்ப்பவர்களுக்கு இது சாதாரண வெங்காயம் தான் என்று தோன்றும். ஆனால் இதை வெட்டி பார்த்தால் மட்டுமே கேக் என்று தெரிய வரும்.

இந்த வெங்காய கேக் இன்ஸ்டாகிராம் வீடியோவை சுமார் 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர், "இதன் தோல் அசல் வெங்காயத்தின் தோல் பகுதி தானே?" என்று கேட்டுள்ளார். மற்றொருவர், "இந்த சிறந்த கலை படைப்பை பாராட்ட எனக்கு புதிய சொற்களஞ்சியமே தேவைப்படுகிறது; இது மிக அட்டகாசமாக உள்ளது" என்று கமெண்ட் செய்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Sideserf Cake Studio (@sideserfcakes)






வெங்காய கேக்கின் தோல் மிக அசலானதாக இருந்ததை பார்த்து பலர் சந்தேகத்துடன் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு நடாலி, "இது வெங்காயத்தின் தோல் கிடையாது. இந்த கேக்கின் தோலை செய்வதற்கு வென்னிலா வேஃபர் பேப்பரை நான் பயன்படுத்தி உள்ளேன்" என்று பதில் கூறியுள்ளார்.

Also read... கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது!

இவரின் இந்த கைவண்ணத்தை @sideserfcakes (or Side Serf Cake Studio) என்கிற இன்ஸ்டாகிராம் ஐடிக்கு சென்று நீங்கள் பார்க்கலாம். இவருக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை இதுவரை இவர் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: