முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!

இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!

car gate

car gate

ஒரு நபர் தனது வீட்டின் கேட்டை தனித்துவமான கேட்டாக மாற்றி அமைத்துள்ளார். அந்த தனித்துவத்தால் தான் நெட்டிசன்களைக் கவர்ந்து இழுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

மஹிந்திரா குழுவின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமீப காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல வித்தியாசமான முயற்சிகளை கண்டறிந்து பாராட்டிப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு நபரின் தனித்துவமான நுழைவுவாயில் ஐடியாவைப்  பகிர்ந்துள்ளார்.

ஒரு நபர் தனது வீட்டின் கேட்டை தனித்துவமான கேட்டாக மாற்றி அமைத்துள்ளார். அந்த தனித்துவத்தால் நெட்டிசன்களைக் கவர்ந்து இழுத்துள்ளார். ஒரு நபர் தனது வீட்டின் கேட் கதவை அறுத்து அதில் ஒரு காரின் பக்கவாட்டு பகுதியை இணைத்துள்ளார். இதனால் காரின் சக்கரம் அந்த கதவிற்கான சக்கரமாக மாறிவிட்டது. இதன் மூலம் கதவை பக்கவாட்டில் எளிதாக சிரமம் இல்லாமல் நகர்த்த முடியும். ரிமோட் மூலமும் அந்த கதவுகளை நகர்த்த முடியும்.

அதோடு காரின் கதவை கேட்டின் கதவாக மாற்றியுள்ளார். அவ்வளவு பெரிய கேட்டில் இருந்து அந்தச் சின்ன காரின் கதவு வழியாக வெளியே வரும் படி அமைத்துள்ளார். இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவுடன் .’இந்த நபர்: 1) ஒரு தீவிர கார் பிரியரா? 2) தன் வீட்டிற்குள் யாரும் நுழைவதைத் தடுக்க இப்படி செய்துள்ளாரா? 3) நகைச்சுவை உணர்வுடன் புதுமையாக முயற்சித்துள்ளாரா? 4) மேலே உள்ள அனைத்தும் கொண்டதாலா?’ என்ற கேள்விகளோடு பதிவிட்டுள்ளார்

இது இப்போது நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கற்பனை திறனில் கலக்கும் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து சுமார் 4.3 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 1400 பேர் இதை  ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

First published:

Tags: Anand Mahindra, Twitter