எதிர்காலத்தைக் காக்க 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த க்ரெட்டா தன்பெர்க் மீண்டும் பூமிக்கு ’டைம் ட்ராவல்’ செய்து வந்துள்ளார்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பாருங்கள். 120 ஆண்டுகளுக்கு முன் எடுத்த இந்தப் புகைப்படத்தில் 3 குழந்தைகள் சேர்ந்து உட்காந்திருக்கும் காட்சியில் அந்தப் பெண் குழந்தை காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராளி க்ரெட்டா தன்பெர்க் போன்றே உள்ளார்.
இந்தப் புகைப்படம் குறித்து ஆய்ந்தவர்கள், இது 1898-ம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கண்டறிந்துள்ளனர். 120 ஆண்டுகள் பழமையான புகைப்படத்தில் இருக்கும் சிறுமி அச்சு எடுத்தது போல் க்ரெட்டா தன்பெர்க் போன்றே இருப்பது சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஐநா சபையில் காலநிலை பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்களைக் கேள்வியால் அதற்றி சர்வதேச அளவில் இளைஞர்களுக்கான ரோல் மாடல் ஆக மாறியவர் க்ரெட்டா தன்பெர்க் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: 150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்... மூழ்கும் வெனிஸ் நகரம்..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.