சிஇஓ சுந்தர் பிச்சையை மாற்ற நினைக்கும் கூகுள்?

Vijay R | news18
Updated: July 29, 2019, 10:36 PM IST
சிஇஓ சுந்தர் பிச்சையை மாற்ற நினைக்கும் கூகுள்?
சுந்தர் பிச்சை
Vijay R | news18
Updated: July 29, 2019, 10:36 PM IST
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பணியிடம் காலியாக உள்ளது என்று லிங்டுஇன் (linkedin) வலைதளத்தில் அறிவிப்பு இருந்தது.

சுந்தர் பிச்சையை சி இ ஓ பொறுப்பில் இருந்து மாற்ற நினைக்கிறதோ என்றே பெரும்பாலானோர் நினைத்திருப்பார்கள் அந்த பதிவை பார்த்து.மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்டுஇன் வலைதளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள் அதிகம் பகிரப்படும். பெரும் நிறுவனங்கள் முதல் சிறு வர்த்தக நிறுவனங்களும் லிங்டுஇன் வலைதளத்தை வேலைவாய்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

லிங்டுஇன் ப்ரிமியம் உறுப்பினர்கள் சந்தா செலுத்தி இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வேலைக்கான பணியிடம் காலியாக உள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை பார்த்த பலர் தங்களது விவரங்களை அதில் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் போலியாக பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.நெதர்லாந்தை சேர்ந்த மிட்செல் ரிஜெண்டர்ஸ் என்பவர் தான் போலியான தகவலை பதிவை செய்துள்ளார். வேலைவாய்ப்பிற்காக அதிகமானோர் பயன்படுத்தும் இந்த வலைதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற நிறுவனங்களை சேர்ந்த பலரும் போலியான தகவலை பதிவிட்டு வருவதாகவும், இதனை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்ற குரல்களும் பல நாட்களாக ஒலித்து வருகிறது.

இந்த பிரச்னை தொடர்பாக லிங்டுஇன் நிறுவனம் கூறுகையில், “இதுப் போன்ற போலியான தகவல் எங்கள் கவனத்திற்கு வந்த உடன் அதை நாங்கள் நீக்கி விட்டோம். பிற நிறுவனங்கள் சார்பாக ஆட்சேர்ப்பு போன்ற பதிவுகள் செய்யும் போது, இரு தரப்பினரின் கவனத்தின் அறிவுரைபடி தான் அனுமதிக்கப்படுகின்றனர். மோசடியான பதிவுகள் எங்கள் சேவை விதிமுறைகளை மீறுவது” என்றுள்ளனர்.

Also Watch

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...