ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எலான் மஸ்க்கின் புலி வருது கதை - டிவிட்டரை வாங்கப் போகிறாரா அல்ல விலகி செல்கிறாரா.?

எலான் மஸ்க்கின் புலி வருது கதை - டிவிட்டரை வாங்கப் போகிறாரா அல்ல விலகி செல்கிறாரா.?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Elon Musk | இந்நிலையில், டிவிட்டரில் ஸ்பாம் யூசர்கள் கணிசமாக இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கருத்து சுதந்திரம் இல்லை, பதிவுகளை திருத்துவதற்கு வசதி இல்லை என்று தொடர்ந்து ட்விட்டர் மீது குற்றச்சாட்டு பகிர்ந்து வந்த எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன் டிவிட்டரின் கணிசமான பங்குகளை வாங்கினார். பின்னர் டிவிட்டரையே வாங்கிவிட்டார். டிவிட்டர் ஒரு தனி மனிதரின் சொத்தாக மாறியுள்ளது. இதற்கான ஆவணங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிகாரபூர்வமாக டிவிட்டருக்கு எலான் மஸ்க் தலைமையேற்க சில மாதங்கள் வரை ஆகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டிவிட்டரில் ஸ்பாம் யூசர்கள் கணிசமாக இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. எலான் மஸ்க் டிவிட்டர் தலைமையாக பொறுப்பேற்பாரா அல்லது விலகிச் சென்று விடுவாரா? அவ்வளவு எளிதாக விலகிச் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

டிவிட்டரில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரப்போகிறது என்பது பற்றியும் பலரும் பேசி வருகின்றனர். இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் ஈடுபட மாட்டார். முதலீட்டை பல மடங்காக பெருக்க, டிவிட்டரில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், போலி யூசர்கள், ஸ்பாம் கணக்குகள் எலான் திட்டத்தை செயல்படுத்தத் தடையாக இருக்கும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது. 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், கிட்டத்தட்ட 13 பில்லியன் டாலர்கள் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல வங்கிகளில் இருந்து நிதி பெற்று ட்விட்டரை வாங்கும் பொழுது, எலான் மஸ்க் டிவிட்டர் மூலமாக பணம் ஈட்டும் வழிமுறைகளைப் பற்றி பேசியிருக்கிறார். ட்விட்டர் இல் புதிதாக சந்தா சேவையை தொடங்க இருப்பதாக எலான் மஸ்க் ஒரு சில ட்வீட்களை பகிர்ந்து இருந்தார். பின்னர் அந்த ட்வீட்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தது.

இன்னும் சில மாதங்களுக்கு அகர்வால் தான் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். ட்விட்டர் எலான் மஸ்கின் கைக்கு முழுமையாக வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று ஏற்கவே கூறப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி எலான் மஸ்க் ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிட்டு விலகி செல்வது அவ்வளவு சுலபம் கிடையாது.

Also Read : ட்விட்டர் டீலை முடிக்கனும்னா இத பண்ணுங்க - கெடு விதித்தார் எலான் மஸ்க்

இரண்டு தரப்பினருமே ஒரு மெர்ஜர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். எனவே ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ள மற்றும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி செயல்பட வேண்டும். தற்பொழுது எலான் விலகிச் செல்வதாக இருந்தால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் மாறுதல்கள் செய்ய வேண்டும். மேலும் ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறார். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி எலான் மஸ்க் செயல்படவில்லை என்றால் ட்விட்டர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரலாம்.

ஒப்பந்தப்படி செயல்பட முடியாவிட்டால் இரண்டு தரப்புமே தலா ஒரு பில்லியன் டாலர் தொகையை ஒப்பந்தத்தை கேன்சல் செய்வதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி ஒரு மில்லியன் டாலர் பணம் செலுத்திவிட்டு தொகையை டெர்மினேஷன் ஃபீயாக செலுத்திவிட்டு எலான் மஸ்க் விட்டு விலகிச் சென்று விடலாமா என்றால் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

Also Read : ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ட்விட்டர் சர்க்கிள்'அம்சம் - என்ன பயன்?

இந்த ஒப்பந்தத்தை யாராவது தடுக்க முயற்சி செய்தால் அப்பொழுது எல்லாரும் விலகிச் செல்லலாம் அல்லது எலான் மஸ்க் கடன் தொகை அதிகமாக இருப்பதாக நினைத்தால் இதில் இருந்து விலகிச் செல்லலாம். மேலும் மெட்டீரியல் அட்வர்ஸ் எஃபெக்ட் என்ற ஒரு கான்செப்ட் வழியாக, ஒப்பந்தம் மேற்கொண்ட நேரத்தைவிட தற்போது ட்விட்டர் மோசமாக மாறி இருப்பதை எலான் மஸ்க் நிரூபித்தால் அவர் டிவிட்டரில் இருந்து வெளியேறலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, Technology, Twitter