ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

3,450 கடல் மைல்.. 112 நாட்கள்.. மிரட்டும் கடலில் தனி ஆளாக படகில் பயணம் செய்த நபர்!

3,450 கடல் மைல்.. 112 நாட்கள்.. மிரட்டும் கடலில் தனி ஆளாக படகில் பயணம் செய்த நபர்!

நியூயார்க் டூ அயர்லாந்து

நியூயார்க் டூ அயர்லாந்து

Solo Travel - World Record | நியூயார்க்கில் இருந்து அயர்லாந்தின் கால்வே நகருக்கு தனி ஆளாக படகில் பயணித்து ஐரிஷ் நபர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடலின் அழகை தூரமாக நின்று ரசிக்க நன்றாக இருக்கும், ஆனால் அதில் இறங்கி பயணம் செய்வது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எப்படிப்பட்ட சவால்களையும் சாதித்துக் காட்டுபவர்கள் தான் சாதனையாளர்களாக உருவெடுக்கின்றனர். அப்படித்தான் ஐரிஷ் நபர் ஒருவர் கடலில் தனி ஆளாக பயணித்து சாதனை படைத்துள்ளார்.

நியூயார்க் டூ அயர்லாந்து பயணம்:

முன்னாள் தொழில்முறை ரக்பி வீரரான டாமியன் பிரவுன் என்பவர், கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அன்று நியூயார்க் நகரத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக படகில் தனி ஆளாக பயணித்து, அயர்லாந்தின் கால்வே நகரை அடைந்துள்ளார். நியூயார் டூ அயர்லாந்திற்கு 112 நாட்கள் படகு மூலம் பயணித்ததன் மூலமாக பிரவுன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பிரவுன், 42 லட்சத்து 2 ஆயிரத்து 500 மணி நேரத்திற்கும் மேலாக, கையால் செய்யப்பட்ட தனது அழகான குஷ்லமாச்ரீ படகை ஓட்டியுள்ளார்.

ஜூன் 14 அன்று, பிரவுன் மன்ஹாட்டனில் உள்ள செல்சியா பியர்ஸில் இருந்து படகில் புறப்பட்டுள்ளார். அயர்லாந்தை அடைய அட்லாண்டிக் பெருங்கடலில் 3,450 கடல் மைல்களைக் கடந்து பயணம் செய்துள்ளார். மேலும் இப்படியொரு உலக சாதனை படைத்த பிரவுனுக்கு நீச்சல் தெரியதாம், தனது துணிச்சலை மட்டுமே வைத்து கரை சேர்ந்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by NowThis (@nowthisnews)கடந்த செவ்வாய் கிழமை அயர்லாந்தில் உள்ள கால்வே நகரை தனது படகில் அடைந்த போது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அந்த உற்சாக வரவேற்பில் பிரவுன் நெகிழ்ந்துபோயுள்ளார்.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

கடலில் பட்ட கஷ்டங்கள்:

கடலில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும், அதனால் நிறைய இடங்களில் மனதில் நெகட்டீவ் ஆன எண்ணங்கள் உதயமானதாகவும் தெரிவித்துள்ள பிரவுன், கடலில் துடுப்பு போட்டு பயணிக்க தீவிரமான சக்தியும், மன உறுதியும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து துடுப்பு போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், 15 நிமிட இடைவெளி விட்டாலும் காற்று அல்லது அலையால் வெகு தூரம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்து வந்த தூரத்தை மீண்டும் அடைய முன்பை விட இரு மடங்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read : கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

நண்பரால் தனியாள் ஆன கதை:

ஆரம்பத்தில் பிரவுன், தனது நண்பர் ஃபெர்கஸ் ஃபாரெல் என்பவருடன் தான் கடல் பயணத்தை தொடங்கியுள்ளார். இருவரும் இணைந்து 56 நாட்களில் நியூயார்க்கில் இருந்து அயர்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக கடல் பயணத்தை தொடங்கிய 13 நாட்களிலேயே பிரவுனின் நண்பருக்கு கடுமையான உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேறு வழியின்றி கடல் பயணத்தை பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடும் முதுகு வலி காரணமாக பயணத்தை பாதியில் கைவிட்ட ஃபரெலும் அயர்லாந்தில் பிரவுனை ஆரத்தழுவி வரவேற்றுள்ளார். நடுக்கடலில் நண்பனை தவிக்க விட்டு வந்ததாக நினைத்தேன். ஆனால் அவர் இப்போது பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என ஃபரெல் தெரிவித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Solo Travel, Trending, Viral Video, World record