Home /News /trend /

கடலில் திமிங்கலம் பிரசிவிக்கும் அரிய காட்சி.. லைக்ஸ்களை அள்ளிய நிகழ்வு

கடலில் திமிங்கலம் பிரசிவிக்கும் அரிய காட்சி.. லைக்ஸ்களை அள்ளிய நிகழ்வு

கடலில் திமிங்கலம் பிரசிவிக்கும் அரிய காட்சி

கடலில் திமிங்கலம் பிரசிவிக்கும் அரிய காட்சி

இந்த போட்டோ இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது. அதேபோல் கமெட்ண்ட் செக்‌ஷனிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  பூமியின் 71 சதவீத இடத்தினை கடல் ஆக்கிரமித்துள்ளது. தன்னுள் பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடல் புற்கள் என 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 105 அடி வரை வளரக்கூடிய நீலத்திமிங்கலங்கள் முதல் முதுகெலுமில்லாத ஜெல்லி மீன்கள் வரை பல மில்லியன் கணக்கான உயிரினங்களை கடல் கொண்டுள்ளது. கடலில் வாழும் 94 சதவீத உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கை பற்றி மட்டுமே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். மீதமுள்ள உயிரினங்கள் குறித்து தினந்தோறும் ஏராளமான ஆராய்ச்சிக்கள் கடலுக்கு அடியில் நடந்து வருகின்றன.

  அப்படி கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி விஞ்ஞானிகள் நடத்தும் ஆராய்ச்சிகளில் கூட சிக்காத பல அரிதான விஷயங்கள், கடலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அல்லது இயற்கை ஆர்வலர்களின் கேமராக்களில் சிக்குவது உண்டு. தற்போது ஆராய்ச்சி மாணவர் ஒருவர், திமிங்கலம் ஒன்று தனது குட்டியை ஈன்றேடுக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

  ஜூன் முதல் நவம்பர் மாதங்கள் வர சதர்ன் ரைட் திமிங்கலங்களை (southern right whale) தென்னாப்பிரிக்க கடல் பகுதிகளில் காண முடியும். குறிப்பாக ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த வகை திமிங்கலங்களை அதிக அளவில் பார்க்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் அரிய வகையான இதனை, இரண்டு திமிங்கல ஆராய்ச்சி தொடர்பாக படித்து வரும் மாணவர்கள் தங்களது சுற்றுலாவின் போது கண்டு ரசித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸும் கிடைத்துள்ளது. ஆம், தென்னாப்பிரிக்க கடலில் அந்த சதர்ன் ரைட்  திமிங்கலம் ஆரோக்கியமான குட்டி ஒன்றினை ஈனும் அரிய காட்சியை ஆராய்ச்சி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக கண்டுள்ளனர்.  அயர்லாந்தின் கால்வேயைச் சேர்ந்த பிஎச்டி மாணவி சிந்தியா பேரிலே மற்றும் சக ஊழியருடன் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஒரு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்த அசாதாரண நிகழ்வை கண்டுள்ளனர். அந்த அற்புத காட்சியை கண்டதோடு, உடனடியாக புகைப்படமும் எடுத்துள்ளனர்.

  சமூக வலைத்தளங்களில் சதர்ன் ரைட் திமிங்கலம் குட்டி போடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள சிந்தியா, எனது பிஎச்.டி, ஆராய்ச்சியை தாக்கல் செய்ய இன்னும் 10 நாட்கள் உள்ளது. ஆனால் அதற்குள் ஒரு திமிங்கல ஆராய்ச்சி மாணவியாக, முதன்முறையாக திமிங்கலம் ஒன்று குட்டி போடும் காட்சியை கண்டுவிட்டேன். நாங்கள் சாதித்துவிட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

  Also read : பயணம் செய்வதில் மோகம்... மளிகை கடை வருமானத்தில் வெளிநாடுகளுக்கு விசிட்.. உலகை சுற்றும் ”மோலி சேச்சி”!

  மற்றொரு பதிவில்,“இது ஒரு நம்பமுடியாத தருணம், மிகவும் சிறப்பு வாய்ந்தது, அநேகமாக என் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் இதுவும் ஒன்று. ஒரு திமிங்கலம் தனது முதல் காற்றை சுவாசித்துள்ளது. வாழ்க்கையில் இன்று போல் வேறு எதுவும் என்னை அதிர்ஷ்டசாலியாக உணரவில்லை” என பதிவிட்டுள்ளார்.

  இந்த போட்டோ இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது. அதேபோல் கமெட்ண்ட் செக்‌ஷனிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நெட்டிசன்களில் ஒருவர், “என்ன மாதிரியான ஒரு நிகழ்வுக்கு சாட்சியாக இருக்கிறீர்கள்! நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி! இதனை பகிர்ந்ததற்கு நன்றி!" எனக்குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் "இது மிகவும் அருமையாக உள்ளது - அற்புத தருணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral

  அடுத்த செய்தி