துபாய் நாட்டிலேயே, இந்த ஆண்டு மிகவும் விரைவாக நடந்த விவாகரத்து வழக்கு பாக்தாத் நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாக்தாத் நகரில் நடந்த ஒரு திருமணத்தின் போது 'ஆத்திரமூட்டும்' ஒரு பாடலுக்கு நடனமாடியதால் மணமகன் மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.
கல்ப் நியூஸின் கூற்றுப்படி, சர்ச்சைக்குரிய அந்த பாடல் மேசய்தாரா என்கிற பாடலாகும். மேசய்தாரா என்கிற வார்த்தை - 'நான் உன்னை ஆதிக்கம் செலுத்துவேன்' அல்லது 'நான் உன்னைக் கட்டுப்படுத்துவேன்' என்கிற மொழிபெயர்ப்பை பெறுகிறது. இந்த வரிகள் தான், திருமண மண்டபத்திலேயே தம்பதியினர் விவாகரத்து வரை சென்று முடிய காரணம்.
குறிப்பிட்ட பாடல் திருமண மண்டபத்தில் ஒலிக்கப்பட்ட போது மணமகள் அதற்கு ஏற்ப நடனமாடியதாக கூறப்படுகிறது அது மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆத்திரமூட்டும் ஒரு செயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மணமகன் மணமகளுடன் தகராறில் ஈடுபட்டு விவாகரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குறிப்பிட்ட, சர்ச்சைக்குரிய சிரிய பாடலின் விளைவாக புதுத்தம்பதியினர் விவாகரத்து பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, ஜோர்டானைச் சேர்ந்த ஒருவர் தனது திருமண கொண்டாட்டத்தின் போது மணமகள் இந்தப் பாடலைப் பாடியதால் அவருடன் தனது உறவை முறித்துக்கொண்டார் என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
Also read : லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய இருவர்.. 10 வினாடியில் ஆட்டம் முடிந்தது
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் தன்னுடன் சண்டை போடுவதே இல்லை, அவர் என் மீது மிகவும் அக்கறையுடன் இருக்கிறார் என்று கூறி விவாகரத்து வழக்கொன்றை தொடுத்தார். திருமணமாகி 18 மாதங்கள் கழித்து, கணவர் தன் மீது மிகவும் பாசத்துடன் இருப்பதை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி ஷரியா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார். வழக்கு விசாரணையின் போது, தன் கணவர் சமையல் செய்து கொடுப்பார், வீட்டு வேலைகளில் கூட உதவி செய்வார், மற்றும் எங்களுக்குள் பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளே வந்தது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.