அப்புறம் என்னப்பா... சட்டு புட்டுனு ஏலத்த ஆரம்பிங்க - இணையத்தில் ட்ரெண்டாகும் IPLAuction2021 ஹேஷ்டேக்

அப்புறம் என்னப்பா... சட்டு புட்டுனு ஏலத்த ஆரம்பிங்க - இணையத்தில் ட்ரெண்டாகும் IPLAuction2021 ஹேஷ்டேக்

ipl auction 2021

இன்று காலை முதலே இந்த ஆண்டு ஏலம் குறித்து பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு உள்ளனர். இது தொடர்பாக IPLAuction2021 என்ற ஹேஷ்டேக்க்கும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

 • Share this:
  14-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெற உள்ளது.

  ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் நடப்பாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளன. இதில், பங்கேற்ககூடிய வீரர்களின் ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்படவுள்ளதால், இந்த ஆண்டு ஏலம் மினி ஏலமாகவே நடத்தப்படுகிறது.

  இந்த ஆண்டு எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு எடுக்க உள்ளனர் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இன்று காலை முதலே இந்த ஆண்டு ஏலம் குறித்து பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு உள்ளனர். இது தொடர்பாக IPLAuction2021 என்ற ஹேஷ்டேக்க்கும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

   

      

      

      

   


   

   

      

     நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும், தங்கள் அணியில் 139 வீரர்களை தக்கவைத்துள்ளன. வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக வீரர்களை தேர்வு செய்வதற்காக எட்டு அணிகளும் ஏலத்தில் பங்கேற்கின்றன. இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நாடுகளிலிருந்து 3 வீரர்கள் என மொத்தம் 292 பேர் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர்.

  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 25 வீரர்கள் வரை இடம் பெறலாம் என்பதால், எட்டு அணிகளிலும் சேர்த்து 61 இடங்கள் காலியாகவுள்ளன. அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சம் 13 வீரர்கள் தேவைப்படுகின்றன.

  அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் ஏலத்தொகையில் இந்திய வீரர்களான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், ஜேஷன் ராய், சாம் பிள்ளிங், மொயின் அலி, மார்க் உட், பிளங்கட், சஹிப் அல் ஹசன் ஆகிய எட்டு வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒன்றரை கோடி ரூபாய் வரிசையில் 12 வீரர்களும், 1 கோடி ரூபாய் ஏலத்தொகையில் 11 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். சச்சின் மகன் அர்ஜூன் குறைந்தபட்ச தொகையான 20 லட்சம் ரூபாய் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: