‘எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’ என்பது பழமொழி, அதனால் தான் காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே தனக்கு பாதுகாப்பான இருப்பிடத்தை தேடிக்கொள்கின்றனர். அதேபோல் உலகில் வாழும் மனிதர்கள் இருந்தாலும் சரி, அது கூலி வேலை செய்பவர்கள் முதல் உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை தனக்கென கனவு இல்லத்தை பார்த்து பார்த்து கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சிலருக்கு மற்றவர்கள் பிரம்மிக்கும் அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
நகரும் வீடு, மிதக்கும் வீடு, பறக்கும் வீடு, கார் வீடு, சொகுசு பஸ்ஸில் வீடு, கன்டெய்னர் வீடு என பல வகையான வீடுகளை பார்த்திருப்போம். ஆனால் லண்டனில் ஒருவர் கட்டியுள்ள வீட்டை பார்த்து சோசியல் மீடியாவில் உள்ள மக்கள் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி வருகின்றனர்.
ரிச்மண்ட்(Richmond) என்ற பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களது வீட்டை கண்ணாடிகளைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். 'London's Invisible House' என்ற பெயருடன் பிரம்மாண்ட கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீடு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘இங்க ஒரு வீடு இருக்கு... ஆனா இல்ல..’ என பார்ப்பவர்கள் குழம்பிப்போகும் வகையில் இருக்குற இடமே தெரியாத அளவுக்கு வீட்டை வடிவமைத்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு வரை சாதாரண வீடாக இருந்த இதை கட்டடக்கலை நிபுணர் அலெக்ஸ் ஹா என்பவர் பிரம்மாண்ட கண்ணாடிகளைக் கொண்டு மறுவடிவமைப்பு செய்துள்ளார். இதில் தற்போது வசிக்கும் குடும்பத்தினர் 2019ம் ஆண்டு குடிபுகுந்துள்ளனர்.
முற்றிலும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது வீட்டிற்கு உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து யாரும் பார்க்கமுடியாது. ஆனால் வீட்டிற்குள்ளிருந்து வெளியே நடக்கும் அனைத்தையும் பார்க்க முடியும் படி ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read : மின்சாரம் இல்லாமல் இயங்கும் புதுமையான ட்ரெட்மில்.! தெலுங்கானா நபர் அசத்தல்
இதுகுறித்து வீட்டில் வசிப்பவர்கள் கூறுகையில், "எங்கள் வடிவமைப்பாளர் அலெக்ஸ் ஹா வீட்டை மறுவடிமைப்பு செய்ய முடிவெடுத்த போது, கண்ணாடி பற்றிய ஐடியாவை கொடுத்தார். மரங்களின் அசைவு அனைத்துமே உங்கள் வீட்டின் கூரையில் பிரதிபலிக்கும். அதாவது, உங்கள் வீடு சுற்றுச்சூழலுடன் பேசும் விதமாக இருக்கும் எனக்கூறினார். அவர் சொன்ன இந்த ஐடியா எங்களுக்கு முகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டோம்” என்கின்றனர்.
Also Read : உக்ரைனை விட்டு தனியாக வெளியேறிய சிறுவன்- மீண்டும் தாயுடன் இணைந்த மகிழ்வான தருணம்
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ஒருவர் ‘கண்ணாடிகளை சுத்தமாக வைத்திருப்பது ரொம்ப கஷ்டம்ப்பா’ எனக்கூறியுள்ளார். மற்றொருவர், "நிறைய பறவைகள் அதில் மோதிக்கொள்ளும்" என கவலை தெரிவித்துள்ளார். மற்றொருவர் “இந்த வீட்டை எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு... பார்க்கும் போதே சிரிப்பு, சிரிப்பா வருது” என கலாய்த்துள்ளார். இப்படி பலரும் இந்த இன்விசிபிள் கண்ணாடி வீட்டின் புகைப்படங்களை விதவிதமான கமெண்ட்ஸ் உடன் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.