• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணிகே மாகே ஹிதே பாடலை பாடி அசத்திய ராணு மோண்டால் ... வைரலாகும் வீடியோ

மணிகே மாகே ஹிதே பாடலை பாடி அசத்திய ராணு மோண்டால் ... வைரலாகும் வீடியோ


மணிகே மாகே ஹிதே

மணிகே மாகே ஹிதே

இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய மணிகே மாகே ஹிதே பாடலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து பின்னர் தன் திறமையால் முன்னேறிய ராணு மோண்டால் பாடி அசத்தியுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண்மணி பிரபலமான பின்னர் மணிகே மாகே ஹிதே பாடலை பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண்மணி பாடிய பாடல், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹே’என்ற இந்தி பாடலை அவர் பாடியிருந்தார்.

    குரலில் இருந்த இனிமையால் மேலும், இந்த வீடியோ இணையத்தில் பரவி, கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்ததால், ஒரே நாளில் ராணு நாடு முழுவதும் பிரபலமானார். இதனை அடுத்து அவருக்கு பாலிவுட் படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்தன. தற்போது, மிகப்பிரபலமான ஒருவர் ஆகிவிட்டதால் ராணு மோண்டல் மிகவும் பிஸியாக இருக்கிறார்.



    அவர் தற்போது மணிகே மாகே ஹிதே பாடலை பாடி உள்ளார். 28 வயதான இலங்கை இசைக்கலைஞர் யோஹானி இந்த பாடலை பாடிஇருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானது. இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாடல் வெளியான 3 மாதங்களில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.



    இது குறித்து முன்னதாக நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில், யோஹானி தனது வாழ்க்கை மற்றும் ஒரே இரவில் பாடல் எப்படி வைரல் ஆனது என்பது குறித்து பேசியிருந்தார். அதில் இது டிக்டோக் வீடியோவுடன் தொடங்கியது.

    எனது தொலைபேசியில், ஒரு பியானோவுடன் பாடலை உருவாக்கினேன். அது நன்றாக இருந்தது, பின்னர் - பாடலின் தயாரிப்பாளர், சமத் சங்கீத் என்னை அழைத்து, “நீங்கள் முழு பாடலையும் பாட விரும்புகிறீர்களா?” என்றார். பாடலை சதீஷன் ரத்நாயகா பாடியுள்ளார், டுகன் ஏஆர்எக்ஸ் வரிகளை எழுதினார் என கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: