Home /News /trend /

வினோத உணவுகளின் ரசிகரா நீங்கள்.. உங்களுக்காகவே ஜப்பானில் பச்சை தவளை கறி காத்துகொண்டு இருக்கிறது,,!

வினோத உணவுகளின் ரசிகரா நீங்கள்.. உங்களுக்காகவே ஜப்பானில் பச்சை தவளை கறி காத்துகொண்டு இருக்கிறது,,!

தவளை சூசி

தவளை சூசி

Raw Frog sushi | டோக்கியோவின் பிரபலமான அசடாச்சி உணவகம் தற்போது தவளை சுஷியை சமைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் பாம்பை நூடில்ஸ் போல் சாப்பிடுவதை பார்த்தே என்னடா இது… பாம்பெல்லாம் சாப்பிடுவார்களா என்று வியந்திருப்போம். ஆனால் இன்று அந்த வியப்பை எல்லாம் தூக்கி விழுங்கும் ஒரு உணவு வகை பரிமாறப்படுகிறது. துடிக்கும் தவளையை அப்படியே தோலுரித்து பரிமாறுகின்றனர்.

ஆமாம் மக்களே சரியாக தான் சொல்கிறோம், உயிரோடு துடிக்கும் உயிரினங்களை அப்படியே பரிமாறுகின்றனர். சமீபத்தில் உயிருள்ள மீன்களை அப்படியே தலையை வெட்டி பரிமாறும் செய்தி உலகை ஆச்சரிய பட வைத்தது. அதன் வியப்பு குறையும் முன்னரே அடுத்த உயிரினம் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

ஜப்பான், சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் உணவு பொதுவாகவே பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை கொண்டிருக்கும். அதோடு விலங்குகள் அல்லது பூச்சிகளால் செய்யப்பட்ட வினோதமான உணவுப் பொருட்களைத் தயாரித்து உண்ணும் வழக்கமும் அவர்களிடம் உண்டு.



பெயரைக் கேட்டாலே முகம் சுளிக்க வைக்கும் பல ஐட்டங்கள் அங்கே பரிமாறப்படுகின்றன. சமீபத்தில், யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், பிரபல ஜப்பானிய உணவகம் ஒன்று, நேரடியாக பச்சையாக தவளையை சுஷி உணவாக வழங்குவதைக் காட்டுகிறது.

டோக்கியோவின் பிரபலமான அசடாச்சி உணவகத்திற்கு, விசித்திரமான உணவுகள், சாஷிமி அல்லது பச்சை மீன் உணவுகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிலையில் அந்த உணவகம் தற்போது தவளை சுஷியை சமைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள்..! -அட நம்புங்க பாஸ்

1 நிமிட வீடியோவில் ஒரு மனிதன், ஒரு தவளையை அதன் கழுத்தில் பிடித்து வெட்டி, பின்னர் அதன் தோலை உரித்து தவளையின் உண்ண முடியாத பகுதிகளை தனது கைகளால் பிரித்தெடுக்கிறார்.

எண்ணற்ற வெட்டுக்கலிட்டு ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கின்றனர். வாடிக்கையாளருக்கு வழங்குவதற்கு முன், சிறிது சோயா சாஸைச் சேர்த்து, எலுமிச்சை மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைக் சேர்த்து உணவை பரிமாறுகின்றனர்

அதன் துடிக்கும் தலையையும் அதே கிண்ணத்தில் வைத்து கொடுக்கின்றனர். தன்னை வெட்டி அதை சாப்பிடும் மனிதனை அது தன் கண்ணால் பார்த்து துடிப்பது போலவே இருக்கிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Food, Japan

அடுத்த செய்தி