Home /News /trend /

International Women’s Day 2022 - சாதனை பெண்மணிகளுக்கான டூடுல்களை வெளியிட்டு கௌரவித்த கூகுள்

International Women’s Day 2022 - சாதனை பெண்மணிகளுக்கான டூடுல்களை வெளியிட்டு கௌரவித்த கூகுள்

Google

Google

International Women’s Day 2022 | சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த பெண்களை பிரதிபலிக்கும் வண்ணம் அனிமேஷன் படங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. டூடுலில் உள்ள பல்வேறு சித்திரங்கள், நமது அன்றாட வாழ்வில் அறியப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
சர்வதேச மகளிர் தினம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இல்லத்தரசிகள் முதல் தொழில்துறையில் சாதிப்பவர்கள் வரை பல்வேறு பெண் கதாபாத்திரங்களை கூகுள் நிறுவனம் கௌரவப்படுத்தியுள்ளது.

கூகுளின் ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள  தேடுபொறியில் (Search engine) டூடுல் எனப்படும் படங்கள் சிறப்பு நாட்களில் மாற்றப்படும். ஒவ்வொரு நாடு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில், அந்தந்த பிராந்தியங்களுக்கு ஏற்பவும் அல்லது சர்வதேச அளவிலும் இந்த டூடுல் படங்களை கூகுள் வெளியிடும். அந்த டூடுல் படத்தில் இடம்பெறும் சிறப்புகள், அதன் மூலமாக எண்ணிலடங்கா இன்டர்நெட் பயனாளர்களின் பார்வைகளை எட்டும்.

தற்போது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த பெண்களை பிரதிபலிக்கும் வண்ணம் அனிமேஷன் படங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. டூடுலில் உள்ள பல்வேறு சித்திரங்கள், நமது அன்றாட வாழ்வில் அறியப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கின்றன. லேப்டாப்பில் பணியாற்றிக் கொண்டே கொண்டே தாய் ஒருவர், அவரது குழந்தையையும் பார்த்துக் கொள்கிறார்.

ஒரு செவிலியர், ஒரு தோட்ட பராமரிப்பாளர் மற்றும் குழந்தைக்கு பாடம் கற்பிக்கும் ஒரு பைக் மெக்கானிக் (பெண்) ஆகியோர் கூகுள் நிறுவனத்தின் டூடுல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளனர். கலை இயக்குநர் தோகா மேர் மற்றும் பெரும்பாலும் பெண்கள் இணைந்த குழுவினர் இந்த டூடுல் இமேஜ்களை உருவாக்கியுள்ளனர்.



இதுகுறித்து தோகா மேர் குறிப்பிடுகையில், “பெண்கள் தாங்கள் கவனிக்கப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். இதற்கு என்னென்ன செய்து கொண்டிருந்தோம் என்பதும், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் மதிப்பிடப்படுகிறது என்பதை பெண்கள் அறிய வேண்டும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலம் என்பது பெண்களுக்கு மிகுந்த சிரமம் கொண்டதாக அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில் நாம் அறிந்த உண்மை என்ன என்றால், தாங்கள் யாருக்காக தேவைப்படுகிறோமோ அவர்களுக்காக பெண்கள் தங்களது லட்சியங்களை மாற்றிக் கொள்கின்றனர். முன்னுரிமைகளை சமரசப்படுத்திக் கொள்கின்றனர் மற்றும் தியாகங்களை செய்கின்றனர்’’ என்றார்.

Also Read : பெண்கள் நிர்வாகம் செய்யும் கம்பெனிகளின் வளர்ச்சி உயர்வு.!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கும்போது, அந்த ஆண்டுக்கான நோக்கம் குறித்து ஐ.நா. அமைப்பு அறிவிப்பு வெளியிடும். இந்த ஆண்டு, “இன்றைய பாலின சமத்துமே நாளைய தினத்தை உறுதியானதாக வைக்கும்’’ என்ற தலைப்பில் மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.



இதன் நோக்கம் என்ன என்றால், “உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்களின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். பருவ நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, அதற்கேற்ப மாறிக் கொள்வது, அதற்கு மதிப்பளிப்பது போன்ற பணிகளைச் செய்து, நாளைய தினத்தை அனைவருக்கும் நிலையானதாக மாற்றுவதற்கு அவர்கள் பாடுபடுகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Google Doodle, International Women's Day, Women's Day

அடுத்த செய்தி