Home /News /trend /

சர்வதேச புலிகள் தினம் 2022 : புலி இந்தியாவின் தேசிய விலங்கான கதை தெரியுமா?

சர்வதேச புலிகள் தினம் 2022 : புலி இந்தியாவின் தேசிய விலங்கான கதை தெரியுமா?

சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம்

WWF படி, தற்போதைய காட்டுப் பூனைகளின் எண்ணிக்கை 3,900 ஆகும். உலகப் புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.

சர்வதேச புலிகள் தினம் 2022: சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

உலக வனவிலங்கு நிதியத்தின்படி, கடந்த நூற்றாண்டில் 97 சதவீத புலிகள் மறைந்து விட்டதாகவும், சுமார் 3,000 புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் கண்டறியப்பட்டதை அடுத்து 2010 ஆம் ஆண்டு சர்வதேச புலிகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. புலிகள் அழிவின் விளிம்பில் இருப்பதால், நிலைமை மோசமடைவதைத் தடுக்க ரஷ்யாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் பல நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அழியும் உயிரினப்பட்டியலில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு!

சட்டவிரோத வனவிலங்கு வேட்டை, வனவிலங்கு வர்த்தகம், மனித-வனவிலங்கு மோதல், வாழ்விட இழப்பு ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்தால் இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இந்த நாள் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் முயல்கிறது. சர்வதேச புலிகள் தினம், இயற்கைக்கான உலகளாவிய நிதியம், விலங்குகள் நலனுக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஸ்மித்சோனியன் நிறுவனம் உட்பட பல சர்வதேச அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.

2017 இல் இரண்டு புதிய புலி கிளையினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. IUCN ஆனது கண்டப் புலி மற்றும் சுந்தா தீவு புலியை புலி கிளையினங்களாக அங்கீகரிக்கிறது.

உலக வனவிலங்கு நிதியம் 2022 ஐ புலிகள் ஆண்டாக அறிவித்துள்ளது. காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவும் புலிகளும்.
1948 ஆம் ஆண்டு தேசிய சின்னங்கள் அறிவிக்கும் போது இந்திய தேசிய விலங்காக இருந்தது ஆசிய சிங்கம். 1973 இல் தான் உலக அளவில் அதிக அளவில் புலிகள் வாழும் இந்தியாவில் அதை பாதுகாக்கும் எண்ணத்தோடு வங்காள புலியை தேசிய விலங்காக அரசு மாற்றியது. மேலும், 1973 இல் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க இந்தியா புலிகள் திட்டத்தை(project tiger) அறிமுகப்படுத்தியது.இந்தியாலும் 16 மாநிலங்களில் புலிகள் வாழ்கின்றன.

புலிகளை பாதுகாக்கும் PROJECT TIGER திட்டம் - நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியீடு

2010இல் திட்டம் TX2 கொண்டுவரப்பட்டது.
புலிகள் அதிகம் காணப்படும் 13 நாடுகள்இணைந்து 2022க்குள் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க (TX2) உறுதியளித்தன. WWF படி, தற்போதைய காட்டுப் பூனைகளின் எண்ணிக்கை 3,900 ஆகும். உலகப் புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.

சர்வதேச புலிகள் தினம் 2022 க்கான கருப்பொருள் "புலிகளின் எண்ணிக்கையை புதுப்பிக்க இந்தியா புலிகளின் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது" என்பதாகும். புலிகளைப் பாதுகாக்க பிராந்திய மக்களுடன் ஒத்துழைக்கும் முயற்சிகளை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Tiger, Wild Animal

அடுத்த செய்தி