International Tiger Day 2021: மனித வாழ்க்கையில் புலிகளின் முக்கியத்துவமும் சில சுவாரஸ்யமான தகவல்களும்!

புலி

வேர்ல்ட் வைட் ஃபார் நேச்சர் (WWF) அமைப்பின் படி, காட்டுப் புலியின் எண்ணிக்கை கடந்த 150 ஆண்டுகளில் 95% க்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் புலிகளின் வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புலிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் தேசிய விலங்குகளாக போற்றப்படும் புலிகளின் எண்ணிக்கை சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், மனித வனவிலங்கு மோதல், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடப்பட்டு கூறுபோடுதல் உள்ளிட்ட பல காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட் வைட் ஃபார் நேச்சர் (WWF) அமைப்பின் படி, காட்டுப் புலியின் எண்ணிக்கை கடந்த 150 ஆண்டுகளில் 95% க்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், புலிகளின் பாதுகாப்பு வரலாற்றில் முதல்முறையாக, அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதை கவனித்துள்ளதாக WWF தெரிவித்தது.

    வருகிற 2022ம் ஆண்டு சீனாவில் புலியின் ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இது காட்டு புலிகளின் எண்ணிக்கையை 6,000க்கும் மேல் இரட்டிப்பாக்க உதவும் ஆண்டாக இருக்கும் என்றும் WWF நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை 3,900 ஆக அறியப்படுகிறது. அதிலும் காட்டு புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 3,000 புலிகள் இந்தியாவில் உள்ளது.

    காட்டு பூனைகளின் எண்ணிக்கை அழிவின் விளிம்பிற்கே செல்லும் முன்பு, புலிகள் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் சுற்றித் திரிந்தன. தற்போது அந்த விலங்குகளின் எண்ணிக்கை அவற்றின் அசல் வரம்பில் வெறும் 7 சதவீதமாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் உலகின் 13 நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட காடுகள் மற்றும் புல்வெளிகளில் மட்டுமே அவை காணப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    காட்டு பூனைகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

    1. புலிகள் சுற்றுச்சூழலில் இருக்கும் உணவுச் சங்கிலியில் அவற்றின் நிலைப்பாடு மிக முக்கியமானது. புலிகள் அதன் உணவுச் சங்கிலியில் சமநிலையைப் பேணுவதன் மூலம் தங்கள் சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

    2. போதுமான புலிகள் இல்லாமல், தாவரவகைகள் நிலத்தை மிகைப்படுத்தி சேதப்படுத்தலாம். இது இறுதியில் உள்ளூர் சூழலின் சமநிலையை சீர்குலைக்கும்.

    3. புலிகள் காட்டில் திருட்டுத்தனமாக வேட்டையாடும் விலங்குகளில் ஒன்று. இந்த விலங்குகளில் மென்மையான கால் பட்டைகள் உள்ளன. அவை அவற்றின் வாழ்விடத்தை சுற்றி அமைதியாக நடக்க உதவுகின்றன.

    4. WWF இன் கூற்றுப்படி, ஒரு புலி தனது இரவு நேர வேட்டை வழக்கத்தில் 9 முதல் 19 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்குமாம்.

    5. உலகிலேயே அமெரிக்கா அதிக புலிகளை சிறைபிடித்துள்ளது. அதன் எண்ணிக்கை வனப்பகுதிகளில் இருக்கும் புலிகளை விட அதிகம்.



    Must Read : இந்தியாவின் 5 பிரபலமான புலிகள்! எங்கு இருக்கு தெரியுமா?

    6. புலிகள் பொதுவாக மான்களை வேட்டையாடுகின்றன. ஒரு பெரிய மானை இரையாக்கிக்கொள்ளும் ஒரு புலி ஒரு வாரத்திற்கு அதன் பசியைப் பூர்த்தி செய்துகொள்ளுமாம்.
    Published by:Suresh V
    First published: