இன்று சர்வதேச துருவ கரடிகள் தினம் - இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் தீம்!

இன்று சர்வதேச துருவ கரடிகள் தினம் - இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் தீம்!

மாதிரி படம்

உலகளாவிய வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகளாவிய வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் அறியவகை உயிரினமான துருவ கரடிகள் அழியும் அபாயத்தில் உள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு கடல் மட்டம் உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவையே உதாரணங்களாக கூறப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது ஆராய்ச்சியாளர் அறிவுறுத்தி வருகின்றனர். புவி வெப்பமடைதல் காரணமாக பனி கட்டிகளின் மேற்பரப்பு உடைந்து விடுவதால் அங்கு வசிக்கும் துருவ கரடிகள் ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வது மிகவும் கடினம் என பிபிசி-யின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் நம்பமுடியாத அளவிற்கு துருவ கரடிகள் அழிந்துவிடும் சூழல் உள்ளது என எச்சரித்துள்ளது.

துருவ கரடிகள் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரிப்பதற்காகவும், அவற்றின் வாழ்வினத்தை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 27ம் தேதி "சர்வதேச துருவ கரடி தினமாக" அனுசரிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், உணவு இல்லாமை மற்றும் வேட்டையாடுதல் ஆகியவை துருவ கரடி இனங்கள் அழிந்து போவதற்கான முக்கியமான காரணங்களாகும். இந்த பிரச்னைகளுக்கிடையே உயிர்வாழ துருவ கரடிகள் எவ்வாறு போராடுகின்றன என்பதையும், அவை அழிந்து போவதை தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.

"போலார் பியர் இன்டர்நேஷனல்" என்ற இலாப நோக்கற்ற அமைப்பு 1994ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தான் பிப்ரவரி 27ம் தேதியன்று சர்வதேச துருவ கரடிகள் தினத்தை கொண்டாடலாம் என முடிவெடுத்தது. புதைபடிவ எரிபொருள் உமிழ்வை குறைப்பதற்காக அன்றாட செயலில் மாற்றங்களை செய்ய சர்வதேச அளவில் மக்களையும், நாடுகளையும் ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த நாள் முதன்முதலில் 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் துருவ கரடிகள் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தீம் "துருவ கரடிகள் மற்றும் அவற்றில் குழந்தைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது". துருவ கரடி இனங்கள் அழிந்துவிடாமல் தடுக்க இந்நாளில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

Also read... சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்தி - அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

புவி வெப்படைத்ததால் வாழ்விடத்தை இழந்தும் உணவு இன்றியும் அங்கங்கே இருக்கும் துருவ கரடிகள் புகைப்பங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பனி உருகி கடல்மட்டம் உயர்வதால் துருவக்கரடிகளுக்கு முக்கிய உணவான சீல்கள் கிடைப்பதில்லை. இதனால் கரடிகள் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது, இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் அவை உயிரிழந்து விடுகிறது. இதனிடையே 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. மேலும், இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டில் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: