உலகெங்கிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், ஐக்கிய நாடுகள் சபையும் பிற அமைப்புகளும் குழந்தைத் திருமணம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, கல்விக்கான அணுகல் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. அதே சமயம், இந்த நாள் பெண்கள் தங்கள் முழு திறனையும் உணர ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு
பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் முதன்முதலில் அக்டோபர் 11, 2012 அன்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பெண் குழந்தைகளின் சர்வதேச தினத்தின் (IDG) 10 வது ஆண்டு விழாவாகும்.
பெண்களுக்கான சர்வதேச தினத்திற்கான யோசனை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 'ஏனென்றால் நான் ஒரு பெண்'(Because I am a Girl’) பிரச்சாரத்திலிருந்து தொடங்கியது. சர்வதேச, தன்னார்வ தொண்டு நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையை இதில் ஈடுபட வலியுறுத்தியது.
ஐ.நா.வின் முன் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பற்றிய தீர்மானத்தை கனடா முறையாக முன்மொழிந்தது. டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அக்டோபர் 11, 2012 ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
கருப்பொருள்:
முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் “குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்” ஆகும்.
இந்த ஆண்டு, யுனிசெஃப் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினத்திற்காக தேர்ந்தெடுத்த கருப்பொருள் 'இது நமது நேரம் - நமது உரிமைகள், நமது எதிர்காலம்' என்பதாகும்.
"பெண்களின் உரிமைகளுக்கான முதலீடுகள் குறைவாகவே உள்ளன. மேலும் பெண்கள் தங்கள் திறனை நிறைவேற்ற எண்ணற்ற சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். காலநிலை மாற்றம், கோவிட்-19 மற்றும் மனிதாபிமான மோதல்கள் ஆகியவற்றின் ஒரே நேரத்தில் நெருக்கடிகளால் மோசமாகிவிட்டது, ”என்று யுனிசெஃப் அதன் இணையதளத்தில் குறிப்பிட்டது.
முக்கியத்துவம்
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும் தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, இன்று 10 மில்லியன் பெண்கள் வரை குழந்தை திருமண அபாயத்தில் உள்ளனர். பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு அதிகம் பலியாகின்றனர். உலகளவில் 4 பெண்களில் ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். மறுபுறம் 10 ஆண்களில் ஒருவர் தான் அப்படி இருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl Child, Girl students, UN