Home /News /trend /

ஜூன் 26: சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

ஜூன் 26: சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

International Day in Support of Victims of Torture: சித்திரவதையின் விளைவுகள், அது வன்முறைச் சுழற்சியாக மாறி, வரும் தலைமுறைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

International Day in Support of Victims of Torture: உலகெங்கிலும், எண்ணற்ற மக்கள் உடல் அல்லது உளவியல் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சர்வதேச சட்டத்தின் கீழ் இது குற்றமாக இருந்தாலும், பல சம்பவங்கள் குற்றங்களாக பதிவாகாமல் இருக்கின்றன.

 துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மற்றும் தொடர்ந்து எதிர்கொள்ளும் மக்களைப் பாதிக்கும் கடமையை மறந்துவிடக்கூடாது. அதற்காக, அனைத்து இயக்கங்களையும், நிறுவனங்களையும் ஒன்றிணைக்க வலியுறுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

சித்திரவதையின் விளைவுகள்,  வன்முறைச் சுழற்சியாக மாறி, வரும் தலைமுறைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ஏலமிட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ரஷ்ய ஊடகவியாளர்

வரலாறு 

டிசம்பர் 12, 1997 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி ஜூன் 26 ஐ சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினமாக அறிவித்தது. மேலும், உலகெங்கிலும் நிகழும் சித்திரவதைகளை முற்றிலும் ஒழிப்பதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான நடத்தைக்கு எதிரான மாநாடு ஜூன் 26, 1987 அன்று நடைமுறைக்கு வந்தது, அதனால்தான் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினத்தை கொண்டாட ஐ.நா இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் சர்வதேச தினம், மனித சித்திரவதைகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது மட்டுமல்லாமல், அது ஒரு குற்றம் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க உருவாக்கப்பட்டது. 



முக்கியத்துவம் 

சித்திரவதைக்கு ஆளானவர்களை ஆதரிக்கும் முதல் சர்வதேச தினத்தை ஜூன் 26, 1998 அன்று கொண்டாடிய ஐநா, அனைத்து அரசாங்கங்கள், நிறுவனங்கள், மற்றும் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களை, சித்திரவதை மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் அதை செயல்படுத்தவும், மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக அனைவரையும் ஒன்றிணைக்கும் நாள் மிகவும் முக்கியமானது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Female victims, Torture, United Nation

அடுத்த செய்தி