சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. 1980 முதல், உலகின் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்துவிட்டோம். சில நாடுகளில் சதுப்புநிலதில் 80% க்கும் அதிகமான அளவு அழிந்துவிட்டது. அதை பாதுகாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது .
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கான சர்வதேச தினத்தின் வரலாறு
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 26 அன்று சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் கொண்டாட, 2015 யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் சதுப்புநில காடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கார்கில் வெற்றி தினம்.. சியாச்சின் பள்ளத்தாக்கு போரின் நினைவுகள்..
சதுப்புநில காடுகள்:
சதுப்புநிலங்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோர பகுதிகளில் அமைந்திருக்கும். அவை அதிக உப்புத்தன்மை, அலை வெள்ளம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவைத் தாங்கும் தன்மை உடையது. இந்த உப்பு தன்மைகொண்ட சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய தாவரங்களாக 110 இனங்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மரங்கள் அலைகளைத் தாங்கி, மீன்கள் மற்றும் ஓட்டுமீன்கள் போன்ற பல உயிரினங்களுக்கு வளமான வாழ்விடத்தை வழங்க உதவும்.வளமான பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதோடு, கடலோர காடுகள் வளிமண்டலத்தில் இருந்து நிலப்பரப்பு காடுகளை விட ஐந்து மடங்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை தன்னுள் உறிஞ்சுகின்றன
ஜப்பான், சீன உணவின் இன்றியமையாத டோஃபு தினம் இன்று ...!
சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கியமானது, ஏனெனில் இது கடற்கரை அரிப்பைத் தடுக்கிறது. அலைகள் மற்றும் சுனாமிகளின் விளைவுகளைத் தணிக்கிறது. அலைகளால் கரையோர நிலம் அரிக்கப்படுவதைத் தடுக்கிறது. நிலப்பரப்புக்குள் வெள்ளம் சுனாமி அலைகள் நுழைவதையும் இந்த மரங்கள் தடுக்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளில், சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது. சதுப்புநிலக் காடுகளுக்கு மிகப்பெரிய ஆபத்து இறால் வளர்ப்பு. இறால்களை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மூடிய குளத்தை உருவாக்க காடுகளின் பெரும்பகுதி வேரோடு பிடுங்கப்படுகிறது.
இறால்களுக்கு நோய்களைத் தடுப்பதற்கும் விளைச்சலை மேம்படுத்துவதற்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாடு காடுகளின் அழிவிற்கு காரணமாகிறது. சில ஆண்டுகளில், காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலை சீர்செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துவிடும்.
இந்த காடுகளில் இருந்து வரும் மரங்களை வெட்டி கரி உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது கடுமையான காடழிப்புக்கு வழிவகுக்கிறது. இது காடுகளை அளிப்பது மட்டுமல்லாமல் சுற்றுசூழலையும் பெரிதளவில் பாதிக்கும்.அதனால் இந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் முக்கிய பணியை நினைவு கூறவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, Forest, Pichavaram