முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மேலான உலகத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்: சர்வதேச கூட்டுறவு தினம்

மேலான உலகத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்: சர்வதேச கூட்டுறவு தினம்

சர்வதேச கூட்டுறவு தினம்

சர்வதேச கூட்டுறவு தினம்

International Co-operative Day: குடிமக்கள் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைய சுய உதவியை நம்பியுள்ளனர். இதற்கு கூட்டுறவுகள் உதவும் கரங்களாக விளங்குகின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச கூட்டுறவு தினம் ஆண்டுதோறும் ஜூலை முதல் சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கூட்டுறவுகள் எவ்வாறு இணக்கமாக செயல்படுகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.

வரலாறு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 16 டிசம்பர் 1992 அன்று ஜூலை 1995 முதல் சனிக்கிழமையை சர்வதேச கூட்டுறவு தினமாக அறிவிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கோப்ஸ்(coops) தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 'மேலான உலகத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்'  தலைப்பில் இந்த தினம் கொண்டாடப்பட உள்ளது.

ஏன் முக்கியமானது?

சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உருவாக்கம் மற்றும் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு கூட்டுறவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கவே சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடுகிறது. பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் பணிகளைக் கொண்ட சிறு ஆவணப்படங்களை இந்நாளில் மக்கள் முன் திரையிடுவர். இந்தத் துறையின் சாதனைகளை முன்னிலைப்படுத்த வானொலி நிகழ்ச்சிகள், செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களையும் ஏற்பாடு செய்வர்.

மேலும் கூட்டுறவு சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை சந்திக்கவும் தங்கள் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் இந்நாளை பயன்படுத்துகின்றனர். உறுப்பினர்கள் இணைந்து இந்நாளில் கேளிக்கை கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர். அதோடு கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் கலந்தாலோசிக்கின்றனர்.

சமூக மட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்தினாலும், கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக மாதிரியின் பலன்களை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு வர விரும்புகின்றன. அவர்களின் கூற்றுப்படி, வளங்களின் சமத்துவமின்மை, உலகமயமாக்கலால் கூட்டப்பட்டது, செல்வத்தின் நிலையான விநியோகத்தை விளைவிக்கும் மதிப்புகளின் தொகுப்பால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளும் மர்மங்களும்.. ஜூலை 2- இன்று உலக யுஎஃப்ஒ தினம் தெரியுமா?

கூட்டுறவு இயக்கம் ஜனநாயகமானது மற்றும் உள்நாட்டில் தன்னாட்சி கொண்டது. அதே நேரத்தில், கூட்டுறவுகள் உலகளாவிய அளவில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அமைப்பாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. குடிமக்கள் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைய சுய உதவியை நம்பியுள்ளனர். இதற்கு கூட்டுறவுகள் உதவும் கரங்களாக விளங்குகின்றன.

சர்வதேச கூட்டுறவு தினத்தின் மதிப்புகள்

கூட்டுறவுகள் சுய பொறுப்பு, ஜனநாயகம், சமத்துவம், சுய உதவி மற்றும் ஒற்றுமை போன்ற பல மதிப்புகளைப் பின்பற்றுகின்றன. இந்த கொள்கைகள் அவற்றின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு மிக அவசியம்.

First published:

Tags: Business, Cooperative bank