Home /News /trend /

வெயிலின் கொடுமையை தணிக்கும் யானை கூட்டம் - சுவாரஸ்ய வீடியோ

வெயிலின் கொடுமையை தணிக்கும் யானை கூட்டம் - சுவாரஸ்ய வீடியோ

 யானை கூட்டம்

யானை கூட்டம்

Viral Video | இந்த வீடியோவில் யானைகள் ஒரு ஆழமற்ற குளத்தின் அருகே நின்று மண் குளியலை ரசிப்பதும், தண்ணீரைத் தெளிப்பதும், கொடுமையான வெயிலில் இருந்து ஓய்வு பெறுவதும், வேடிக்கையாக விளையாடுவதுமாக உள்ளன.

நாடு முழுவதும் அதிக வெப்பத்தினால் தத்தளித்து வரும் நிலையில், கோடையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய எல்லோரும் முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஆண்டுகளை விடவும் தற்போது வெயில் அதிகமாக உள்ளது. இந்த வெயிலை தணிக்க பலரும் மலை பிரதேசங்கள், குளிர் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள் அல்லது குளிரான பகுதிகள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அதே போன்று வீட்டில் இருக்கும் போதும் ஏசி-யுடன் வெப்பத்தை சமாளித்து வருகின்றனர். மனிதர்களுக்கு இப்படி வசதிகள் உள்ளன.

ஆனால் காடுகளில் உள்ள விலங்குகளுக்கு வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லவோ அல்லது ஏர் கண்டிஷனர்களை இயக்கவோ இயலாது. இருப்பினும், மாறும் வானிலைக்கு தங்களைப் பழக்கப்படுத்த இயற்கை அன்னை அவர்களை தயார்படுத்தியுள்ளது. இதற்கு தான் நீர் நிலைகளை விலங்குகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நீர் நிலைகளும் இல்லை என்றால் அவ்வளவு தான்.

காடுகளில் உள்ள விலங்குகள் தங்கள் அருகிலுள்ள நீர்நிலைகளை குளிப்பதற்கும், கடுமையான கோடையில் வெப்பத்தை தணிக்கவும் பயன்படுத்துகின்றன. இது போன்று, காட்டு விலங்குகள் வெப்பத்தை தனித்து கொண்டு இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை IFS அதிகாரி பர்வீன் கஸ்வான் அவர்கள் பகிர்ந்துள்ளார். அதில் யானைக் கூட்டம் எப்படி "வெப்பத்தைக் தணிக்கிறது" என்பதை காட்டி உள்ளார்.

இந்த வீடியோவில் யானைகள் ஒரு ஆழமற்ற குளத்தின் அருகே நின்று மண் குளியலை ரசிப்பதும், தண்ணீரைத் தெளிப்பதும், கொடுமையான வெயிலில் இருந்து ஓய்வு பெறுவதும், வேடிக்கையாக விளையாடுவதுமாக உள்ளன. இந்த வீடியோவை பதிவிட்ட ​​​​ஐஎஃப்எஸ் அதிகாரி, மிக பெரிய பாலூட்டியான யானை வெப்ப அலைகளால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். கஸ்வான் இது குறித்து சிலவற்றை பதிவிட்டுள்ளார். “இது வாலலோவிங் என்று அழைக்கப்படுகிறது. யானைகள் அதை விரும்புகின்றன. இது அவர்களை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், "யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை, ஆனால் பெரிய உருவம் உள்ளதால் மேற்பரப்பு பகுதியில் அதிக வெப்பம் உருவாகிறது. எனவே இதனால் அவற்றின் காதுகளை மடக்குவது மிகவும் முக்கியம்," என்றும் அவர் கூறினார். இந்த பதிவை, சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும், 3600-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, மென்மையான ராட்சத உயிரினங்கள் கோடை காலத்தை ரசிக்கும் காட்சியைக் கண்டு வியப்படைகின்றனர்.

Read More : ஒரே வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 4 பெரிய மலைப்பாம்புகள்: வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி

ட்விட்டர் பயனர்களில் ஒருவர், "இதை பார்க்க வேண்டும்!! இந்த மென்மையான உயிர்களை அவர்களின் இயற்கையான சூழலில் பார்ப்பது எவ்வளவு மரியாதை மற்றும் பாக்கியமான விஷயம். அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது நமக்கு மிகவும் முக்கியமானது" என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொருவர், "பார்ப்பதற்கு இந்த காட்சி அழகாக உள்ளது" என்று கூறியுள்ளார். இது போன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 
Published by:Elakiya J
First published:

Tags: Elephant, Trending Videos, Viral Videos

அடுத்த செய்தி