Home /News /trend /

கூகுளில் நீங்கள் பல கேள்விகளை கேட்டிருக்கலாம் - இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?

கூகுளில் நீங்கள் பல கேள்விகளை கேட்டிருக்கலாம் - இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?

Google

Google

Google Job Interview | கூகுள் நிறுவனத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் உங்கள் ஆச்சரியத்தை கொடுக்கக் கூடும். பல்வேறு பணிகளுக்காக நடத்தப்பட்ட இண்டர்வியூ மற்றும் அதில் அவர்கள் கேட்ட கேள்விகள் குறித்த பட்டியல் இதோ..

கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று வேலை தேடும் பலருக்கும் கனவுகள் இருக்கும். சிலருக்கு கூகுளில் பணியாற்ற விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், கூகுள் நிறுவனத்தின் இண்டர்வியூக்களில் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது குறித்து பலருடன் யூகத்துடன் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வேலை தேடி வரும் நபர்களிடம் நிறுவனங்கள் கேட்கும் வெவ்வேறு கேள்விகள் குறித்து சமூக ஊடகங்களில் சுவாரஸ்யமான தகவல்கள் உலா வரும். அதிலும், கூகுள் நிறுவனத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கக் கூடும். பல்வேறு பணிகளுக்காக நடத்தப்பட்ட இண்டர்வியூ மற்றும் அதில் அவர்கள் கேட்ட கேள்விகள் குறித்த பட்டியல் இதோ இருக்கிறது.

வேலை : அசோஸியேட் அக்கவுண்ட் ஸ்ட்ரேடஜிஸ்ட்

கேள்வி - ஒரு வார்த்தைக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் என்றால், அது என்னவாக இருக்கும்.?

இந்தக் கேள்வி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கேட்கப்பட்டது.

வேலை : சாப்ட்வேர் இன்ஜினியர்

கேள்வி - உங்களுக்கு சம்பாதிப்பது பிடிக்குமா அல்லது கற்றுக் கொள்வது பிடிக்குமா.?

இந்தக் கேள்வி கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கேட்கப்பட்டது.



வேலை : பிசினஸ் அனலிஸ்ட்

கேள்வி - ஒரு கட்டடத்தில் இருந்து வெளியேறுவதற்கான திட்டத்தை டிசைன் செய்யவும்.?

2014ஆம் ஆண்டு இண்டர்வியூவில் இந்தக் கேள்வி இடம்பெற்றது.

வேலை : இண்ட்ராக்‌ஷன் டிசைனர்

கேள்வி - உங்களுக்கு வேலை இல்லை என்றால், என்ன செய்ய விரும்புவீர்கள்.?

கேள்வி கேட்கப்பட்ட காலம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் ஆகும்.

Also Read : முதலாளிகளின் இந்த 5 செயல்கள் எரிச்சலை தர கூடியவை!

வேலை : ப்ராடக்ட் மேனேஜர்

கேள்வி - கிளவுட் கம்ப்யூடிங் குறித்து 6 வயது குழந்தைக்கு எப்படி புரிய வைப்பீர்கள்.?

நவம்பர் 2015ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்வி

வேலை : அக்கவுண்ட் ஸ்ட்ராடஜிஸ்ட்

கேள்வி - இப்போது நீங்கள் சிஇஓ அதிகாரி என்றால் உங்கள் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் 3 விஷயங்கள் என்னென்ன.?

இந்தக் கேள்வி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கேட்கப்பட்டது.

Also Read : வெற்றிகரமான பெண்கள் கடைபிடிக்கும் பழக்கங்கள்.!

வேலை : ப்ராடக்ட் மேனேஜர்

கேள்வி - நீங்கள் 24 மணி நேரமும் மளிகை பொருள் டெலிவரி செய்யும் வணிகத்தை செய்கிறீர்கள் என்றால், இதற்காக உங்களுக்கு எத்தனை லாரிகள் தேவைப்படும்.?

இந்தக் கேள்வி 2015ஆம் ஆண்டு  கேட்கப்பட்டது.



வேலை : கிரியேடிவ் ஸ்பெஷலிஸ்டு

கேள்வி - ஹெடிஎம்எல் முக்கியத்துவம் குறித்து எனது பாட்டிக்கு நான் எப்படி கற்பிப்பது.?

கேள்வி கேட்கப்பட்ட காலம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி ஆகும்.

Also Read : பணி அழுத்தம்… அதனால் ஏற்படும் இருதய பிரச்சனை…

வேலை : ஆட்வோர்ட்ஸ் அசோசியேட்

கேள்வி - ஃபோனில் கோபத்தோடு அல்லது வெறுப்போடு பேசும் விளம்பரதாரர்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்.?

வேலை : பிசினஸ் அசோசியேட்

கேள்வி - அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஹேர் கட் நடைபெறுகிறது என நினைக்கிறீர்கள்.?

Also Read : நீங்கள் செய்யும் வேலையை அதிகமாக வெறுக்கிறீர்களா..? இந்த 4 விஷயங்களை செய்து வாருங்கள்..!

வேலை : போல்ட் கேண்டிடேட்

கேள்வி - ஜி-மெயில் பயன்படுத்துவதற்கு கூகுள் ஒரு டாலர் கட்டணம் வசூலிப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?

2015ஆம் ஆண்டு இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Interviews, Job

அடுத்த செய்தி