ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்சியம் : திகைத்துப் போன மணமகன்! - வைரலாகும் வீடியோ!

திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்சியம் : திகைத்துப் போன மணமகன்! - வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

திருமணத்தில் இப்படியெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேட்பது போன்று இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு சிறுவர்கள், இளம் தலைமுறையினர், வயதானவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அடிமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றுதான் சோஷியல் மீடியாக்கள். சாப்பிட உணவு கூட இல்லாமல் இருந்துவிடுவோம். ஆனால் ஒரு நாள் கூட சமூக வலைத்தளங்களைப் பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம்.

  இதற்கேற்றால் போல் தான், உலகில் என்ன நடந்தாலும்.. எங்கு நடந்தாலும்.. நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருவதோடு சில நாள்களுக்கு சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துவிடுகின்றன சில வீடியோக்கள். அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  வட இந்தியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், மணமகளுக்கு பூவுடன் ப்ரோபஸ் செய்த சிறுவனின் செயலை கண்டு திகைத்துப்போன மணமகனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

  Read More : கல்யாணம் என்றால் என்ன? வாய்விட்டு சிரிக்க வைக்கும் பள்ளி மாணவரின் பதில் வைரல்

  மணமகளுக்கு ப்ரோபஸ் செய்த சிறுவன்…

  “கல்யாணத்தை முடித்துப் பார், வீட்டைக்கட்டிப்பார்“ என்ற பழமொழியை நாம் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம்.. ஆம் திருமணம் செய்வது என்பது எளிய காரியமில்லை. அதிலும் மணமகள் வீட்டார்கள், பெண்ணுக்கு எந்தக்குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து பல விஷயங்களை மேற்கொள்வார்கள். இருந்தப் போதும் சில நேரங்களில் பல பிரச்சனைகள் எப்படியாது நமக்கு வந்துவிடும். இப்படித்தான் வட இந்தியாவைச் சேர்ந்த திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்ற சுவாரஸ்சிய நிகழ்வு ஒன்று, அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

  திருமண விழாவில் மணக்கோலத்துடன் மேடையில் அமர்ந்திருந்தனர் மணமக்கள். ஒவ்வொருவரும் வரிசையாக வந்து போட்டோசூட் எடுத்துச்சென்ற நிலையில் தான், எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவர், கையில் ரோஜா பூவுடன் உள்ளே வருவது போன்று வீடியோ ஆரம்பிக்கிறது. வாழ்த்துகளைத் தெரிவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், திடீரென ரோஜா மலரை மணமகளிடம் கொடுத்து ப்ரோபஸ் செய்ய சொல்கிறார். அந்த மணப்பெண்ணோ? அடேய் என்ன டா செய்கிறாய்? என்று நினைத்துக் கொண்டே புன்னகைக்கிறார். பின்னர் மலரை வாங்கிக் கொள்வது போன்று வீடியோ முடிவடைகிறது.


  திருமணத்தில் இப்படியெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேட்பது போன்று இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஏன்டா சிறுவனாய் இருந்ததால் காமெடியாக போய்விட்டது. இல்லையென்றால் பெரும் கலவரம் என்றும், புதுமணப் பெண்ணின் புன்னகை மிகவும் அழகாக உள்ளது என பதிவிட்டுள்ளனர். திருமணத்தை நிறுத்துவதற்கு இப்படியெல்லாம் இனி செய்யலாமே? என்று கேளிக்கை மெசேஜ்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். இதோடு எவ்வளவு கஷ்டப்பட்டு திருமணம் நடத்தினால் இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியதோடு பல லைக்குகளையும், ஈமோஜிகளையும் இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் ரவீந்தர் சிங் உருவாக்கி இசையமைத்த பஞ்சாபி டிராக் இருந்ததும் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Instagram, Trending Video, Viral Video