சில வகை எறும்புகள் உண்மையிலேயே தனித்துவமானவை மற்றும் மிகுந்த நுண்ணறிவை பெற்றுள்ளவை. எறும்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஆர்வம் மிக குறைவாக இருக்கலாம். ஆனால் உண்மையிலே சில உண்மைகள் உங்களை வியக்க வைக்கும். இந்த சிறிய உயிரினங்கள் தொடர்பான சில ஆச்சரியமான உண்மைகள் இங்கே.
* மழைக்காடுகளில் நிலத்தடி கோட்டைகளை கட்டும் எறும்புகள் முதல் பறக்கும் எறும்புகள் வரை, உலகெங்கிலும் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளன.
* புல்லட் ஆன்ட் எனப்படும் எறும்பு தான் உலகிலேயே மிகவும் வலி தர கூடிய கொடுக்கை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் போன்ற ஈரப்பதமான காடுகளில் வாழும் இந்த வகை எறும்புகள் தங்கள் கொடுக்கால் கடிப்பது ஒரு தோட்டாவால் தாக்கப்படுவதற்கு சமமானது.
* ஒரு சிறிய எறும்பின் மூளையில் மொத்தம் 2.5 லட்சம் மூளை செல்கள் காணப்படுகின்றன, இது அதன் மனதை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது.
* எறும்புகள் தங்கள் உடலையும், மனதையும் சார்ஜ் செய்ய நீண்ட மற்றும் ஆழ்ந்த தூக்கம் தூங்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக எறும்புகள் ஸ்நேப் எனப்படும் குட்டி தூக்கம் மட்டுமே போடுகின்றன. நமக்கு குட்டித்தூக்கம் என்றால் சுமார் அரை மணி நேரம். ஆனால் எறும்புகளின் குட்டி தூக்கம் என்பது 1 நிமிடத்திற்கு மேல் இல்லை. ஆனால் எறும்புகள் தினமும் சுமார் 250 முறை குட்டி தூக்கம் போடுமாம்.
Also Read : ஓராண்டு பயணம் - 3,500 கி.மீ. கடந்து சென்று தன் கூட்டத்தோடு திரும்பி வந்த யானை
* எறும்புகள் அதிக வலிமை கொண்டவை. பொய் இல்லை, எறும்புகள் பெரிய அளவிலான உணவையோ அல்லது இறந்த உயிரினங்களை தங்கள் தலையில் சுமந்து செல்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். எறும்புகள் சராசரியாக அவற்றின் சிறிய உடலை விட 20 மடங்கு அதிக எடையை சுமக்கும் திறன் கொண்டவை.
* எறும்புகளுக்கு காதுகள் இல்லை. ஆனால் எறும்புகளுக்கு ஒலி கேட்காது என்று அர்த்தமல்ல. எறும்புகள் கேட்பதற்கு அதிர்வுகளைப் பயன்படுத்துகின்றன. உணவுக்காக அல்லது எச்சரிக்கை சமிக்ஞையாக அவற்றைப் பயன்படுத்துகின்றன. எறும்புகள் பாதத்தின் அதிர்வு மற்றும் அதைச் சுற்றியுள்ள நரம்புகளின் அசைவைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படுகின்றன.
* சில எறும்புகளுக்கு இறக்கைகள் உள்ளன, சிலவற்றிற்கு இல்லை. அனைத்து எறும்பு இனங்களும் இறக்கைகளை வளர்க்க கூடியவை என்றாலும், பறப்பதற்கு இறக்கைகளை அவை விரும்புவதும் விரும்பாததும் அதனதன் கையில்தான் உள்ளது.
* பெரும்பாலான பூச்சிகளை போலவே, எறும்புகளும் குளிர் காலத்தை விரும்புவதில்லை. குளிர் சீசன்களில் பெரும்பாலும் எறும்புகள் உறங்கவே விரும்புகின்றன. எனவே தான் குளிர்காலத்தில் நாம் எறும்புகளை அதிகம் பார்க்க முடிவதில்லை.
* ஆராய்ச்சியின் படி எறும்புகள் 130 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன ஒவ்வொரு எறும்புக்கும் இரண்டு வயிறுகள் உள்ளன, ஒன்று உணவை சேமித்து வைக்க மற்றொன்று மற்ற எறும்புகளுக்கு உணவு கொடுக்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.