ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

WATCH - 'தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும்'.. அப்பாவின் பாசத்துக்கு இந்த வீடியோ சாட்சி.. உருக வைத்த மகன்!

WATCH - 'தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும்'.. அப்பாவின் பாசத்துக்கு இந்த வீடியோ சாட்சி.. உருக வைத்த மகன்!

இன்ஸ்டாவில் வைரலான வீடியோ

இன்ஸ்டாவில் வைரலான வீடியோ

தனது தந்தையின் பாசம் குறித்து பவன் சர்மா என்ற இன்ஸ்டாகிராம் யூசர் வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

நம் நாட்டில் ஆண் பிள்ளைகளிடம் அம்மாக்கள் நேரடியாக அன்பை கொட்டி வெளிப்படுத்துவது போல அப்பாக்கள் வெளிப்படுத்துவதில்லை. அதேவேளை அப்பாக்களின் சின்ன சின்ன பாவனைகள் மூலமாகவே மனதிற்குள் எவ்வாறு ஆழ்ந்த அன்பை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். தேவர் மகன் படத்தில் சிவாஜியும் கமலும் வீட்டிற்குள் ஆக்ரோஷமாக வாதம் செய்துகொண்டு, பின்னர் சமாதானமாகி கமல் சிவாஜியை விட்டு விலகி செல்வார். அப்போது கமலுக்கு தெரியாமல் சிவாஜி ஓரமாக நின்று அவர் பத்திரமாக செல்வாரா என்பதை கவனித்து கொண்டிருப்பார். கமல் தடுமாறி விழப்போகும் போது சிவாஜி பதறிப்போக அதை பார்த்து கமல் தந்தையின் பிரியத்தை புரிந்து கொள்வது போல காட்சி அமைத்திருக்கும்.

அப்பாக்கள் தங்கள் சொற்கள் மூலம் பாசத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அவர்களின் சிறிய செயல்கள் மூலமாகவே அவை வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு தந்தையின் காணொளி தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பவன் சர்மா என்ற இன்ஸ்டாகிராம் யூசர் தனது தந்தையின் பாசத்தை வீடியோ மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இவரது தந்தை மகன் பவன் சர்மாவை ரயில் ஏற்றி வழி அனுப்ப ரயில் நிலையம் வந்துள்ளார். மகன் ரயில் ஏறி கொண்டார். தொடர்ந்து ரயில் புறப்பட்டு நகரத் தொடங்கிய நிலையில், ரயில் புறப்பட்டு விட்டதே என்று அங்கிருந்து தந்தை உடனடியாக செல்லவில்லை. மாறாக அந்த ரயில் மெதுவாக நகரும் வேகத்திலேயே உடன் நடந்து வரும் தந்தை ரயில் முழுமையாக கடந்து செல்லும் வரையில் நின்று பார்த்துவிட்டு தான் சென்றார்.
 
View this post on Instagram

 

A post shared by Pawan Sharma (@pwn.sharma)தந்தையின் இந்த செயலை வீடியோ எடுத்த மகன் பவன் சர்மா இன்ஸ்டா பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு முறை தந்தை இவ்வாறு செய்யும் போதும் நான் உணர்வசமாகி விடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டிரெண்டாகி வைரலாகி வருகிறது. 9.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர். 1.1 லட்சம் பேர் லைக் செய்து நெகிழ்ச்சியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற உணர்வை எனது அப்பாவிடமும் நான் பெற்றுள்ளேன் என பலர் யூசர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


First published:

Tags: Father, Instagram, Viral Video