ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

10-ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் செய்த சாதனை ஐஏஎஸ் அதிகாரி... இளைஞர்களின் ரோல்மாடல் என குவியும் பாராட்டுகள்

10-ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் செய்த சாதனை ஐஏஎஸ் அதிகாரி... இளைஞர்களின் ரோல்மாடல் என குவியும் பாராட்டுகள்

IAS Officer

IAS Officer

IAS Officer Motivational Story | குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாழ்க்கை கதை, இன்று நம் எல்லோருக்கும் நம்பிக்கை  ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நமது வாழ்க்கையில் எதோ ஒரு சூழலில் நாம் அடைந்த தோல்வி தான் நம்மை உயர்த்துவதற்கு பல வழிகளிலும் உதவி இருக்கும். இதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கவே கூடும். தோல்விகளை படிக்கட்டுகளாக மாற்றி அதில் வெற்றி பெறுபவர்களையே வரலாறு பேசும். இப்படிப்பட்ட வெற்றி கதைகள் தான் நம்மை உற்சாகமூட்டும். நமது வாழ்க்கைக்கும் புது உத்வேகத்தை தரும். பலருக்கும் தங்களது வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் வெற்றிக் கதைகள் எப்போதும் உதவும்.

அந்த வகையில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாழ்க்கை கதை, இன்று நம் எல்லோருக்கும் நம்பிக்கை தரும் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. குஜராத்தில் உள்ள பரூச் என்கிற மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியரான துஷார் சுமேரா அவர்களை பற்றிய ஊக்கமூட்டும் கதையை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் புகைப்படத்தை ட்விட்டரில் சமீபத்தில் வேறொரு ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் பதிவிட்டு இருந்தார். இதன் மூலம் இவர் நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளார். அப்படி என்னதான் அந்த பதிவில் இருந்தது என யோசிக்கிறீர்களா?

மாவட்ட ஆட்சியரான துஷார் சுமேரா, தனது 10 ஆம் வகுப்பில் கணக்கு பாடத்தில் 36 மதிப்பெண்கள் எடுத்ததை குறிப்பிட்டு தான் அந்த பதிவை அவனிஷ் சரண் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அவர் வெளியிட்ட ட்வீட்டில் இரண்டு படங்கள் இருந்தன. அதில் ஒன்று சுமேராவின் மதிப்பெண் பட்டியளாக இருந்தது. அதில் அவர் தனது பள்ளி தேர்வுகளுக்கு எடுத்த மதிப்பெண்களைப் பட்டியலிட்டார். கணிதத்தில் 100-க்கு 36 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும் அவர் பெற்றிருந்தாக இருந்தது. இன்னொரு படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுமேரா அவர்கள் தனது அலுவலகத்தில் பெருமையுடன் அமர்ந்திருக்க கூடிய ஒரு படம் இடம் பெற்றிருந்தது.

அந்த பதிவில், “பரூச் கலெக்டர் துஷார் சுமேரா, தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​10 ஆம் வகுப்பில் தான் தேர்ச்சி பெற்றதாக எழுதினார். அவர் 100-க்கு 35 மதிப்பெண்களை ஆங்கில பாடத்திலும், கணிதத்தில் 36 மதிப்பெண்களும், அறிவியலில் 38 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். அவரின் கிராமம் முழுவதும் மட்டுமின்றி அந்த பள்ளியிலும் அவரால் முன்னேற முடியாது என்று கூறப்பட்டு இருந்தது" என்பதை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

தற்போதைய சமூகத்தில், நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் எலி பந்தயத்தால் தூண்டப்பட்ட இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால்தான் சுமேராவின் நம்பிக்கையான இந்த வாழ்க்கைக் கதை நெட்டிசன்களின் இதயத்தை கவர்ந்து உள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற உதவாது என்பதை ஆட்சியர் சுமேராவின் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

First published:

Tags: Motivational Story, Trending