Whale London Thames River : தேம்ஸ் நதியில் உலாவிய குட்டி திமிங்கலம் - என்ன நடந்தது தெரியுமா?

தேம்ஸ் நதியில் உலாவிய குட்டி திமிங்கலம்

தேம்ஸ் நதியில் உலாவிய காயம்பட்ட இளம் திமிங்கலத்தை பார்க்க மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் திரண்டனர்.

  • Share this:
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியில், ஒரு குறுகிய கால்வாய் பகுதியில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான இடம் உள்ளது. அங்கிருக்கும் உருளைகளுக்கு நடுவே மின்கே வகை குட்டித் திமிங்கலம் சிக்கியிருந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பிடி, அந்தப்பகுதிக்கு சென்ற லண்டன் துறைமுக அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் உருளைக்குள் சிக்கியிருக்கும் திமிங்கலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காத வகையில் திமிங்கலம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. பல மணி நேரத்துக்குப் பிறகு இளம் திமிங்கலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீட்பு படையினர் கொண்டு வந்தனர்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள், திமிங்கலத்தை பரிசோதனை செய்ததில் குட்டி திமிங்கலத்துக்கு உடலில் காயம் ஏற்பட்டதை உறுதி செய்தனர். படகு உருளைகளுக்குள் இருந்துவாறு அங்கும் இங்கும் செல்லும்போது திமிங்கலத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தேம்ஸ் நதியில் திமிங்கலம் இருக்கும் தகவலையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து திமிங்கலத்தை பார்க்க போட்டிப்போட்டனர்.

 



அப்போது, திடீரென மீட்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிய மின்கே திமிங்கலம், தேம்ஸ் நதியின் அழமான பகுதியை நோக்கிச் சென்றது. இரவு நேரமாக இருந்தாலும் திமிங்கலத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். திமிங்கலம் எங்கு இருப்பது என்பதை கண்டுபிடிப்பது என்பது அவர்களுக்கு சவாலாக இருந்தது. ஒருவழியாக இரவு 7 மணி திமிங்கலம் இருக்கும் பகுதியை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சவுத்வெஸ்ட் மினிஸ்டர் பகுதி அருகாமையில் இருக்கக்கூடிய ஆழமான பகுதியில் திமிங்கலம் இருந்தது.

ALSO READ : தொடர் ஓட்டத்தில் புகுந்த நாய்... போட்டியில் வெற்றி பெற்று அசத்தல் - வைரல் வீடியோ!

லண்டன் தீயணைப்புத்துறையினர் திமிங்கலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் பிரிட்டீஸ் டிரைவர்ஸ் மரைன், ராயல் நேஷனல் லைப்போட் மீட்பு குழுவினரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். ஒருவழியாக மீண்டும் திமிங்கலத்தைப் பிடித்த அவர்கள், முறையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, பாதுகாப்பான ஆழமான பகுதியில் இரவு ஒரு மணிக்கு அதனை விடுவித்தனர். லண்டன் துறைமுக அதிகாரி ஒருவர் மீட்பு பணிகள் குறித்து பேசினார். "மின்கே திமிங்கலங்கள் வட அட்லாண்டிக் பசுக் கடலில் காணப்படும் அரிய வகை திமிங்கலங்கள்.

 



 

திமிங்கல இனங்களிலேயே மிகவும் சிறிய வகையைச் சேர்ந்தது. அதிகபட்சமாக 26 முதல் 29 அடி வரை நீளம் மட்டுமே இருக்கும். அந்த இனங்களில் இருக்கும் சில குட்டி திமிங்கலங்கள் இரைக்காக திசைமாறிச் செல்லும். அந்தவகையில் இந்த மின்கே திமிங்கலம் தேம்ஸ் நதிக்குள் வந்திருக்கலாம். முதலில் படகு உருளைக்குள் இருந்த திமிங்கலத்தை மீட்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

ALSO READ :  ஸ்காட்லாந்தில் கடையில் நுழைந்து டுனா சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை : வைரலாகும் வீடியோ!

உருளைக்குள் சென்று வந்ததால், அதற்கு காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவர்கள் பரிசோதனை நடத்திய நிலையில் திடீரென மீட்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றது. மீண்டும் அதனை கண்டுபிடித்து இஸ்ஸேல் வொர்த் தீவுக்கு அருகாமையில் ஆழமான பகுதியில் கொண்டு விட்டுவிட்டோம். அது பாதுகாப்பான பகுதி, திமிலங்கலம் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்" என கூறினார்.
Published by:Sankaravadivoo G
First published: