Video: போதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..

எஸ்.ஐ மகேந்தருக்கு முத்தம் கொடுத்த பானு மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, அத்துமீறி நடந்து கொண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த நல்லகுண்டா காவல் நிலைய போலீசார் வாலிபர் பானுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 30, 2019, 1:00 PM IST
Video: போதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..
போலீசுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி
Web Desk | news18
Updated: July 30, 2019, 1:00 PM IST
காவல்துறை சப் இன்ஸ்பெக்டருக்கு போதையில் முத்தம் கொடுத்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் போனால பண்டிகை என்ற பெயரில் அந்த மாநில மக்களின் சம்பிரதாய திருவிழா நடை பெற்று வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இரவு ஹைதராபாத் டி.ஆர்.டி காலனி வித்யாநகரில் போனால பண்டிகை திருவிழா நடை பெற்றது.
திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் மது அருந்திவிட்டு திருவிழா ஊர்வலத்தில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மது போதையில் ஊர்வலத்தில் நடனம் ஆடி சென்று கொண்டிருந்த வங்கி ஊழியரான வாலிபர் பானு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மகேந்தரை திடீர் என்று இழுத்த அவருக்கு முத்தம் கொடுத்தார்.

வாலிபர் பானுவின் செயலால் கோபம் அடைந்த எஸ்.ஐ. மகேந்தர் அவரை அறைந்தார். ஆனால், பானு குடிபோதையில் நடனமாடியபடி இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ. மகேந்தருக்கு முத்தம் கொடுத்த பானு மீது அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, அத்துமீறி நடந்து கொண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த நல்லங்குண்டா காவல் நிலைய போலீசார் வாலிபர் பானுவை தேடி வருகின்றனர்.

Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...