கொரோனா வந்துருச்சின்னு வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன புருஷன்.. விடாமல் போலீசிடம் சிக்கவைத்த மனைவி

மாதிரிப்படம்

போலி கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் உதவியுடன் ஒருமாதம் மனைவியை விட்டு விலகியிருந்துள்ளார்.

  • Share this:
    பேர கேட்டா சும்மா அதிருதில்ல.. என உலகநாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா. நம்மூர் ஆட்களோ கொரோனாவை ‘நீதான் அந்த வெளியூர் ஆட்டக்காரானா’ என்கிற ரேஞ்சில் டீல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை என எல்லாத்துக்கு கொரோனா பெயரை இழுத்துவிடும் செய்திகள் வலம் வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு மட்டும் வாய் இருந்தால் ‘பொண்டாட்டி கூட சண்டையாம் அதுக்கெல்லாம்” என் பெயரா யூஸ் பண்ணறாங்கன்னு புலம்பி இருக்கும்.

    மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆஜஸ் அகமது ப்ளைவுட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவியிடம் இருந்து விலகி இருப்போம் முடிவு செய்து ஒரு வில்லங்கமான முடிவை எடுத்துள்ளார். தனக்கு கொரோனா பாசிடிவ்-ன்னு வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

    Also Read: ஹைனாவிடம் முத்தம் வாங்கிய பாம்பு மனிதன்...மில்லியன் வியூஸ் பெற்று வைரலாகும் வீடியோ !

    அத்தோடு நிறுத்தியிருக்கலாம். பிசிஆர் டெஸ்ட் எடுத்துட்டேன் ரிப்போர்ட் வந்திருக்குன்னு வீட்டுல காட்டியிருக்கிறார். இளைஞருக்கு கொரோனா எல்லாம் இல்லை. அவரே பி.சி.ஆர் டெஸ்ட் மாதிரியை போலியாக உருவாக்கி வீட்டில் காட்டியுள்ளார். வேறு ஒருவருடைய ரிப்போர்டில் இருந்த பெயர் மற்றும் போட்டோவை நீக்கிவிட்டு அதனை போட்டோஷாப் செய்துள்ளார். நான் கொரோனா மையத்துக்கு சிகிச்சைக்கு போறேன்னு சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த டெஸ்ட் ரிப்போர்ட் உதவியுடன் ஒருமாதம் மனைவியை விட்டு விலகியிருந்துள்ளார். அகமது வீட்டுக்கும் வரவில்லை. ஒரு மாசமாவா மனுஷனுக்கு கொரோனா இருக்குன்னு சந்தேகப்பட்ட மனைவி விவரத்தை அவரது தந்தையிடம் கூறியுள்ளார். மேலும் அந்த ரிப்போர்ட சந்தேகமா இருக்கு இது என்னன்னு விசாரிச்சுட்டு வாங்கன்னு கூற ஆஜஸ் அகமது தந்தை பிசிஆர் ரிப்போர்ட் எடுத்துக்கிட்டு  நேரா லேப்-க்கே போய்விட்டார். அங்கு சென்றதும் மகனின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    Also Read:என்னென்ன செய்றான் பாருங்க.. நடனம் ஆடி ரசிகர்களை சேர்க்கும் நாய்.. - வைரல் வீடியோ

    இந்த சம்பவம் தொடர்பாக லேப் டெக்னீசியன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இப்போது ஆஜஸ் வில்லங்கத்தை விலைக்கொடுத்து வாங்கிக்கொண்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர். கோச்சுகிட்டு போறதுக்கு எல்லாமா கோவிட் பெயர் யூஸ் பண்ணுவீங்க..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: