• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சிக்னலில் நடனமாடிய சூப்பர் மாடல்... காவல் துறை அனுப்பிய கண்டிப்பு நோட்டீஸ் - வைரல் வீடியோ

சிக்னலில் நடனமாடிய சூப்பர் மாடல்... காவல் துறை அனுப்பிய கண்டிப்பு நோட்டீஸ் - வைரல் வீடியோ

சிக்னலில் நடனமாடிய சூப்பர் மாடல்

சிக்னலில் நடனமாடிய சூப்பர் மாடல்

மத்யபிரேதேச மாநிலம் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கம் சாலை எப்போதும் பரபரப்பு மிகுந்து காணப்படும். அந்த சாலையில் சிக்னல் போட்டவுடன் இளம் பெண் மக்களுக்கு விழுப்புணர்வு கொடுக்கிறேன் என செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    'ஸ்ரேயா கல்ரா' என்ற மாடல் ஒருவர் மக்களுக்கு கொரோனா குறித்து மாஸ்க் அணிவதன் அவசியத்தையும், சிக்னல் விதிகளை மீறக்கூடாது என்ற சாலை விழிப்புணர்வையும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

    இந்த செயல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு 'ஸ்ரேயா கல்ரா' ஒப்புக்கொண்டுள்ளார். இது ஸ்ரேயா கல்ராவின் விழிப்புணர்வுக்கு இந்தூர் காவல்துறையால் ஏற்பாடு செய்யபட்ட பிரச்சாரம் ஆகும்.

    இதற்காக மத்யபிரேதேச மாநிலம் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கம் சாலையில் சிக்னல் போட்டவுடன் ஸ்ரேயா கல்ரா விழிப்புணர்வு நடனமாடி உள்ளார். இதனை சாலையில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் பெண்ணின் உடன் வந்தவரும் வீடியோவை எடுத்துள்ளனர். சிக்னலில் விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில் அந்த பெண் நடனமாடி உள்ளார்.

     

     



     

    எனினும் வீடியோ வைரலாகி இணையத்தில் அதிகம் பார்க்கப்பட நிலையில் போக்குவரத்து விதியை பெண் மீறியதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவித்ததாக பலரும் புகார் கூறினர். மேலும் விதி மீறல் நோட்டீஸை காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர் . இருப்பினும் தன்மீது தவறு இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: