• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய பெண் - தீயாக பரவும் வீடியோ!

போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய பெண் - தீயாக பரவும் வீடியோ!

சிக்னலில் நடனமாடிய பெண்

சிக்னலில் நடனமாடிய பெண்

இதுகுறித்த விசாரணையின் போது அந்த பெண் ஸ்ரேயா கல்ரா என்ற பெண் மாடல் என்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்தூர் நகரின் ராசோமா சதுக்கம் எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலையாகும். அங்கு 'ரெட் சிக்னல்' போட்ட உடன் ஒரு பெண் திடீரென்று நடுரோட்டில் உள்ள ஜீப்ரா கிராசிங்கில் வந்து நடமாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்துள்ளார். விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில்அந்த பெண் நடனமாடியுள்ளார். மேலும் தனது நடனம் மூலம் முக கவசம் அணியுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரின் நடனம் வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்த நிலையில் அவர்களும் வீடியோ எடுத்தனர். போக்குவரத்தை கட்டுப்படுத்த மற்றும் வழிகாட்ட தன்னார்வத் தொண்டு செய்யக்கூடிய மக்களுக்காக இந்தூர் காவல்துறையால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தை தவறாக கருதினர். எனினும் இந்த வீடியோ வைரலாக நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் இதுகுறித்த விசாரணையின் போது அந்த பெண் ஸ்ரேயா கல்ரா என்ற பெண் மாடல் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானபோது அனைவரும் இதை விளம்பரம் என நினைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரேயா கல்ரா தான் நடனம் ஆடியது ஏன் என்பது குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், போக்குவரத்து விதிகளை மீறியதாக தன் மீது எழுந்துள்ள குற்றத்தை முழுவதுமாக மறுத்துள்ளார்.

Also read... மேகியில் மில்க் ஷேக்கா... அலறும் நெட்டிசன்கள்: இப்படியெல்லாமா யோசிப்பாங்க!

பொதுமக்களிடையே முககவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இதனை செய்ததாக விளக்கம் அளித்துள்ளார், வேறு யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை, தற்போது வைரல் ஆகும் வீடியோ தவறான வழியில் எடுக்கப்பட்டது என்றும் கல்ரா விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும் இந்த வீடியோவானது தற்போது ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் மட்டுமின்றி செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுவதால் எண்ணற்ற விமர்சனங்களையும், கருத்துகளையும் பெற்று வருகிறது. ஏராளமானோர் கல்ராவின் நடனம் நன்றாக இருப்பதாக கூறினாலும், சாலையில் நடனமாட அவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விமர்சனங்களுக்கு மத்தியில் பரவலாக இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: