’திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் உள்ளோம்’ - முதன்முறையாக அழகுத் தமிழில் விமானத்தில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த கேப்டனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

’திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் உள்ளோம்’ - முதன்முறையாக அழகுத் தமிழில் விமானத்தில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்
கேப்டன் பிரியா விக்னேஷ்
  • Share this:
தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலேயே வெளியிடப்படுகின்றன. இதற்கிடையில், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருப்பவர் வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர், தமிழில் அறிவிப்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசும் அவர், ‘திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கிறோம்.இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் என பிரியும் இடத்தைக் காண முடியும். இந்த இரண்டு ஆறுகளும் பிரியும் இடத்திலுள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர். நீங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் காண காணலாம்’ என்று அழகுத் தமிழில் பேசியுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுதெரிவித்துவருகின்றனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading