ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

''4 நாளில் ஓடிடுவேன்னு சொன்னாங்க..'' இந்தியாவின் முதல் ரயில்வே கேட்வுமன் சல்மாவின் சாதனை கதை!

''4 நாளில் ஓடிடுவேன்னு சொன்னாங்க..'' இந்தியாவின் முதல் ரயில்வே கேட்வுமன் சல்மாவின் சாதனை கதை!

இந்தியாவின் முதல் ரயில்வே கேட்வுமன் சல்மா

இந்தியாவின் முதல் ரயில்வே கேட்வுமன் சல்மா

Trending | கடந்த 10 ஆண்டுகளாக சல்மா கேட்வுமனாக பணியாற்றி வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் இன்னமும் சில வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதில் குறிப்பாக கேட் கீப்பர் எனப்படும் ரயில்வே கேட் பாதுகாவலர் பணி எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ரயில் வரும் நேரம் பார்த்து கேட்டை மூட வேண்டும், ரயில் கடந்த சென்ற பிறகு கேட்டை திறக்க வேண்டும் இவ்வளவு ஈசியான வேலையை ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்குவது ஏன்? என்று தோன்றலாம்.

வெளியில் இருந்து பார்க்க எளிமையாக தெரிந்தாலும் கேட் கீப்பராக இருப்பது என்பது பொறுப்புகள் மிக்க, பல உயிர்களை காக்க வேண்டிய வேலையாகும். எனவே இதனை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றிந்த நிலையை சல்மா தகர்த்தெறிந்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக சல்மா ‘கேட்வுமன்’ பணியமர்த்தப்பட்டுள்ளார்.

யார் இந்த சல்மா பேக்?

லக்னோவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்ஹவுர் ரயில்வே கிராசிங் வழியாக பயணிப்பவர்களுக்கு, அங்கு கடந்த 10 ஆண்டுகளாக கேட்வுமனாகப் பணிபுரியும் சல்மா பற்றி தெரியும். அந்த ரயில்வே கிராசிங்கிற்கு முதன்முறையாக வருபவர்கள், சல்மா செய்யும் வேலையை பார்ப்பவர்கள் வியந்து போகிறார்கள். ஹிஜாப் அணிந்து கொண்டு ஆண்களுக்கு சமமாக வேலை செய்யும் சல்மாவைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே கிடையாது. அந்த ரயில்வே கிராசிங்கை தாண்டிச் செல்லும் பலரும் சல்மாவுடன் நின்று செல்ஃபி கூட எடுத்துக்கொள்கின்றனர்.

நாட்டின் முதல் ‘கேட்வுமன்’ என்று புகழ் பெற்றவர் சல்மா பேக். மிகவும் பரபரப்பான மல்ஹூரில் உள்ள ரயில்வே கிராசிங்கில் வேலை செய்து வருகிறார். 19 வயதான மிர்சா சல்மா பேக், லக்னோவைச் சேர்ந்தவர். அவரே விரும்பித் தான் ரயில்வே துறையில் இந்த வேலைக்கு சேர்ந்துள்ளார்.

Read More : உயிரோடு கல்லறைக்குள் போக ரூ.47 லட்சம்.. இப்படியும் ஒரு தெரபி!

சல்மா கேட்வுமன் ஆனது எப்படி?

சல்மா 2013 ஆம் ஆண்டு இந்த பணியில் இணைந்துள்ளா. இதன் மூலமாக இந்தியாவின் முதல் கேட்வுமன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஆனால் ஆண்கள் செய்யக்கூடிய வேலையாக கருதப்படும் கேட் கீப்பர் பணிக்கு சல்மா பணியமர்த்தப்பட்டது பெரும் விவாதமாக வெடித்துள்ளது. அப்போது ரயில்வே அதிகாரிகள் இந்த பணியில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்றும் இந்த வேலைக்காக மிகவும் குறைந்த அளவிலான பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் தான் சல்மாவைத் தவிர பிற பெண்கள் வேலைக்கு நியமிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

நியூஸ் 18 சேனலிடம் தனது கதையை சல்மா பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, “சல்மாவின் தந்தை மிர்சா சலீம் பேக்கும் இங்கு கேட்மேனாக இருந்ததுள்ளார். காலப்போக்கில் காது கேட்கும் திறனை இழந்ததாலும், பிற நோய்கள் காரணமாகவும் சலீம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். வாரிசு கோட்டாவின் அடிப்படையில் மகள் சல்மாவிற்கு தனது வேலையை சலீம் பெற்றுத் தந்துள்ளார். வீட்டில் சலீமைத் தவிர சம்பாதிக்கும் நபர்கள் யாரும் இல்லாததால், குடும்பத்தை காப்பற்றுவதற்காக சல்மா படிப்பை விட்டு விட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது பெற்றோருக்காகவும், குடும்பத்திற்காகவும் கடந்த 10 ஆண்டுகளாக சல்மா கேட்வுமனாக பணியாற்றி வருகிறார்.

சல்மாவை சூழ்ந்த ஏளனங்கள்:

பரபரப்பான ரயில்வே கிராசிங் என்பதால், இங்கு அடிக்கடி ரயில்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. கிராசிங்கில் முதல்முறையாக வேலைக்கு வந்தபோது இளம் பெண்ணான சல்மாவை பார்த்து ரயில்வே ஊழியர்கள், “ஒவ்வொரு நிமிடமும் ரயில் இந்த பகுதி வழியாக செல்வதால், இந்த பொண்ணால் கேட்டை மூடவும் திறக்கவும் முடியாது. இது ஒரு பெண்ணின் வேலை அல்ல. இந்த பெண் இன்னும் 4 நாட்களில் வேலையை விட்டு ஓடிவிடுவாள்” என்று விமர்சித்துள்ளனர். ஆனால், சல்மா இங்கு பணிபுரிந்து 10 வருடங்கள் ஆகிறது. இப்போது தனது அனைத்து ஊழியர்களும் முழுமையாக ஆதரிப்பதாகவும், தனது 12 மணி நேர வேலையை பொறுப்புடன், திறம்பட செய்து வருவதாகவும் சல்மா தெரிவிக்கிறார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral