• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பைக் ரைடிங்கில் கலக்கும் மாற்றுத்திறனாளி அர்ச்சனா...!

பைக் ரைடிங்கில் கலக்கும் மாற்றுத்திறனாளி அர்ச்சனா...!

அர்சனா

அர்சனா

பெங்களூருவைச் சேர்ந்த அரச்சனா திம்மராஜூ பைக் ரைடிங்கில் உலகம் முழுவதும் கலக்கி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெங்களூருவைச் சேர்ந்த அரச்சனா திம்மராஜூ, செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பைக் ரைடிங்கில் உலகம் முழுவதும் கலக்கி வருகிறார்.

36 வயதான அர்ச்சனா திம்மராஜூ பெங்களுருவில் வசித்து வருகிறார். பிறவி செவித்திறன் குறைப்பாட்டுடன் பிறந்த அவர், மல்லய்யா அதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் கலை மற்றும் உலோக சிற்ப ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 40 விழுக்காடு செவித்திறனுடன் பிறந்த அர்ச்சனா, தனக்கு காது கேட்காது என்பதை ஒரு பொருட்டாக இதுவரை எண்ணியதில்லை. விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பால் பைக் ரைடிங்கில் கலக்கி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு இடங்களுக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் மூலமாக பயணித்து சாதனை படைத்துள்ளார்.

செவித்திறன் குறைபாடு காரணமாக, தனியாக பயணம் செய்யும்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், வழியில் மக்களுடன் கலந்துரையாட முடியாது என்பதால் உடன் டேனியல் சுந்தரம் என்பவரையும் அழைத்துச் செல்கிறார். இருவரும் இணைந்து கடந்த ஆண்டில் உலகிலேயே மிக உயரமான வாகன பாதையான கார்டங்லா வழியே பூடானில் உள்ள லீ என்ற இடத்திற்கு பெங்களுருவில் இருந்து சென்று திரும்பியுள்ளனர். அடுத்தகட்டமாக, அர்ச்சனா திம்மராஜூவும் அவரது நண்பரும் இணைந்து 94 உலக நாடுகளை பைக் மூலம் சுற்றிப் பார்க்க உள்ளனர்.

அப்போது, பல நாடுகளின் கலாசாரத்தையும், உணவு வகைகளையும் தெரிந்து கொள்வதோடு, ஆசிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள செவித்திறனற்றவர்களுக்காக நடத்தப்படும் 60 பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய அர்ச்சனா தர்மராஜூ, " பைக் சத்தத்தை கேட்க முடியாதே தவிர, அதன் அதிர்வுகளை என்னால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் யமஹா ஆர்எக்ஸ் 100 என்ற பைக் மூலம் ஒட்ட கற்றுக் கொண்டேன். எனக்கு செவித்திறன் இல்லை என்பதை உணர்த்துவதற்காக பைக்கின் பின்னால், வண்டி ஒட்டுபவருக்கு காது கேட்காது.

என்னைப் பற்றி ஏதாவது விமர்சித்தால் அதை கேட்கும் சக்தி எனக்கில்லை என்று எழுதி வைத்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் டேனியல் சுந்தரம் என்பவருடன் இணைந்து மௌளப் பயணம் என்ற அமைப்பை தொடங்கி செவித்திறன் அற்றவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அதாவது, இந்த அமைப்பின் மூலம் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் இருச்சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு உதவி செய்கிறது. அர்ச்சனா தர்மராஜூ தற்போது மொழிகளை கற்றுக்கொள்வதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

Also read... சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்தி - அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்ட அவர், வாய் அசைவுகளை வைத்து எதிரில் இருப்பவர் என்ன கூறுகிறார் என்பதையும் புரிந்துகொள்கிறார். பைக் ரைடிங்கில் தீவிர ஆர்வமுள்ளவராக இருக்கும் அவர், லைசென்ஸ் வாங்கியதும் எளிதில் நடத்துவிடவில்லை. பல்வேறு தடைகளை கடந்து வாகன ஓட்டுநர் உரிமையை பெற்றிருகிறார். இது குறித்து பேசும்போது, செவித்திறன் குறைபாடு உடையவர்கள் லைசென்ஸ் வாங்குவதில் பிரச்சனைகள் இருந்தாலும், மோட்டார் வாகன விதிகளை முறையாக பின்பற்றி, அதனை தேர்ச்சி பெற்றுவிட்டால் லைசென்ஸ் வாங்கிவிடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை மற்றும் அரசின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: