ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தானிய ATM!

இந்தியாவின் முதல் தானிய ATM

நாட்டின் முதல் உணவு தானிய ஏடிஎம் "அன்னபூர்த்தி" ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவிலேயே முதன் முறையாக ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் தானிய ஏடிஎம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. தானிய விநியோகத்திற்கெனஒரு ஏடிஎம்-ஐ திறக்க வேண்டும் என்ற ஒரு தனித்துவமான முன்முயற்சியைத் அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. ‘அன்னபூர்த்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரம் குருகிராமில் உள்ள ஃபாரூக்நகரில் அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தானியங்கள் விநியோகிக்கும் பணியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த புது யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக அம்மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தாவது, “நாட்டின் முதல் உணவு தானிய ஏடிஎம் "அன்னபூர்த்தி" ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன். இந்த ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், அரசாங்கத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் தானியங்களை விநியோகிப்பது எளிதானது மற்றும் தொந்தரவில்லாதது. " என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இந்த ஏடிஎம் ஒரு பைலட் திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த இயந்திரத்தை நிறுவுவதன் நோக்கம் சரியான நேரத்தில் சரியான பயனாளிக்கு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதாகும் என்று அமைச்சர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏடிஎம் வெற்றிகரமாக இயங்கிய பின்னர், கைமுறையாக தானியங்களை வழங்குவதில் உள்ள தொந்தரவைக் குறைப்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு டிப்போக்களில் இதுபோன்ற தானியங்களை விநியோகிக்கும் ஏடிஎம்களை நிறுவும் திட்டங்களும் விரைவில் கொண்டுவரப்படும் என்று சவுதாலா குறிப்பிட்டுள்ளார். கைமுறையாக வழங்கும் போது தானியத்தை அளவிடுவதில் ஏற்படும் பிழை இதில் மிகக் குறைவு, மேலும் இந்த இயந்திரத்தால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் 70 கிலோ வரை தானியங்களை விநியோகிக்க முடியும்.

Also read... 8 கால்கள், 2 இடுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!

தொடுதிரை கொண்ட பயோமெட்ரிக் அமைப்புடன் இந்த ஏடிஎம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் தானியங்களைப் பெற ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு அட்டையின் தனித்துவமான எண்ணை உள்ளிடலாம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, இயந்திரம் கோதுமை, அரிசி மற்றும் தினை ஆகிய தானியங்களை விநியோகித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ், இந்த தானிய ஏடிஎம்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் முதலில் தொடங்கப்பட இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ‘அன்னபூர்த்தி’ ஏடிஎம்கள் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஒரு பகுதியாகும்.

அவை இந்தியாவின் ஏழ்மையான பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள உணவுப் பற்றாக்குறை பிரச்சினைகளையும் போக்க இந்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றன. 2020 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட உலக உணவுத் திட்டம், எத்தியோப்பியன், மாலி, பங்களாதேஷ், கென்யா, சூடான் ஆகிய நாடுகளுடன் உணவுப் பற்றாக்குறை மற்றும் பசி பிரச்சினைகளை தீர்க்க நெருக்கமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: