வெவ்வேறு மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலருக்கு அலாதியான ஆர்வம் இருக்கும். மொழியே தெரியாமல், அதனுடன் பழகிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அதாவது, நீங்கள் டிக் டாக் வீடியோ பலவற்றை பார்த்திருப்பீர்கள். நம்முடைய தமிழ் பாட்டுக்கு உலகின் எங்கோ ஒரு மூளையில் உள்ள வெளிநாட்டு நபர் ஒருவர் நடனமாடுவது அல்லது லிப் சிங்க் செய்வது போன்ற திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருப்பார்கள்.
மொழி புரியாவிட்டாலும் கூட, அதில் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப உடல் பாவணையை வெளிப்படுத்தும் கலைஞர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இன்னும், சிலருக்கு உலகின் தொன்மையான மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதிலும், அமுதினும் இனிமையான தமிழ் மொழியை கற்க பலருக்கும் விருப்பம் இருக்கும்.
தமிழ் கற்கும் அமெரிக்க யூ-டியூபர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஏரையா ஸ்மித் என்பவர் தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, மொழியை கற்று வருகிறார். இந்நிலையில், வி-லாக் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள தோசை கடைக்கு முதலில் செல்லும் அவர், பின்னர் அருகாமையில் உள்ள தமிழ் உணவுக் கடைக்கும் சென்றார். அங்கு உணவுகளை தமிழில் அவர் ஆர்டர் செய்தார்.
குறிப்பாக, “இங்கு என்ன உணவு பிரபலமாக இருக்கிறது. செட்டிநாடு வகை இறைச்சி உணவு நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அது கிடைக்குமா?’’ என்று அவர் கேட்க, இவரது அழகு தமிழில் அசந்து போன கடை உரிமையாளர், அவருக்கான உணவை இலவசமாகக் கொடுத்தார்.
Read More : இரவில் இரண்டு பெரிய மலை பாம்புகளுடன் தினமும் உறங்கும் வினோத மனிதர்!
உலகின் பழமையான மொழி என புகழாரம்
தமிழ் மொழி குறித்த தனது அனுபவங்களை ஸ்மித் பகிர்ந்து கொண்டார். அதில், “உலகில் பயன்பாட்டில் உள்ள மொழிகளில் தமிழ் தான் மிகவும் தொன்மையானது என்பதை அறிந்த பிறகு, நான் தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டேன். இந்தியாவிலும், இலங்கையிலும் பேசப்படும் இந்த மொழி அமெரிக்காவில் அரிதானது.
ஆனாலும், நியூயார்க் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தமிழ் உணவுக் கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் தொன்மை வாய்ந்த, அழகான ஆனால் சவால் மிகுந்த இந்த மொழியை நான் பேச முற்பட்டபோது, என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்’’ என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இவரது வீடியோ யூடியூப் வலைதளத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. அவரது வீடியோவை பார்க்கும் பலரும் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், ஸ்மித் இதுபோல பிற மொழிகளில் பேசி பிறரை கவருவது இது முதல்முறை அல்ல. முன்பு ஒருமுறை குஜராத் உணவுக் கடைக்கு இதேபோல சென்று, குஜராத்தி மொழியில் பேசி அசத்தினார். யூ-டியூப் சேனல் மட்டுமல்லாமல், மொழி வகுப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் இணையதளம் ஒன்றையும் ஸ்மித் நடத்தி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.