Home /News /trend /

'இங்குட்டு மீனாட்சி அங்குட்டு யாருனு..' - இந்தியர்களின் இங்கிலீஷ்.. சிரிக்காம படிங்க ப்ளீஸ்..

'இங்குட்டு மீனாட்சி அங்குட்டு யாருனு..' - இந்தியர்களின் இங்கிலீஷ்.. சிரிக்காம படிங்க ப்ளீஸ்..

ஆங்கில சொல்லாடல்கள்

ஆங்கில சொல்லாடல்கள்

1600 களின் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கில மொழி இந்தியர்களின் வழக்கிற்கு ஏற்ப திரிந்து இந்தியமயமாக்க பட்ட சில சொலவடைகளை உருவாகியுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai, India
ஒவ்வொரு மொழியும் ஒரு இடத்திற்கு செல்லும்போது அந்த இடத்தில் உள்ள கலாச்சாரம், அங்கு இயல்பாக பயன்படுத்தப்படும் மொழி, அதன் சொல்லாடலுக்கு ஏற்ப இந்த மொழியும் திரிந்து செயல்படும். அந்த இடத்தில பயன்படுத்தும் சொல்லாடலை புதிதாக வந்த மொழியில் அப்படியே மொழிபெயர்த்து பயன்படுத்துவர். இதனால் புதிய சொல்லாடல்கள்  உருவாகும்.

இப்படி 1600 களின் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கில மொழி இந்தியர்களின் வழக்கிற்கு ஏற்ப திரிந்து இந்தியமயமாக்க பட்ட சில சொல்லாடல்களை உருவாகியுள்ளது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

 • Side, please. இதை நீங்கள் அதிகம் வட இந்தியர்கள் சொல்ல கேட்கலாம். நம் சென்னையிலும் இந்த சொல்லாடல் இருக்கும். இது ஏதோ வலது புறத்தையோ இடதுபுறத்தையோ குறிப்பது அல்ல, ‘கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லவே இந்த சொல்லாடல் பயன்படுத்துகின்றனர்.

 • Give me a missed call: இந்த பழக்கமே இந்தியாவில் தோன்றியதோ என்று சந்தேகிக்க வைப்பது இந்த மிஸ்ஸுடு கால் கொடுக்கும் பழக்கம். நேரம் இருந்தால் மிஸ்ஸுடு கால்  கொடு . நான் அழைக்கிறேன் என்பது. எவ்வளவு அன்லிமிடெட் பேக் போட்டாலும், மிஸ்ஸுடு கால் பழக்கம் போவதில்லை.

 • Any issues? இதை பார்த்ததும் ஏதோ சமூக பிரச்சனை, அரசியல் செயல்பாட்டை கேள்வி கேட்கும் வார்த்தை என்று நம்பிவிடாதீர்கள். உனக்கு எத்தனை குழந்தைகள் என்பதைத்தான் அப்படி கேட்கின்றனர்.


குழந்தைகளுக்கான கார்டூனில் ஓர் பாலின ஜோடி அறிமுகம்!

 • Would you like a cold drink? பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு பானம் குளிர்ந்து இருக்கிறதோ அது தான் கோல்ட் ட்ரிங்க். ஆனால் நம் ஊரில் சோடா, பேண்டா,மிராண்டா எல்லாமே கோல்ட் ட்ரிங்க் தான். அது அறை வெப்பநிலையில் இருந்தால் கூட, குளிர் பானம் என்றே அழைக்கப்படுகிறது. இன்னும் நம் ஊரில் கலர் சாப்டாட்ரியா பா என்பார்கள். அதுவும் இப்படிமருவி வந்தது தான்

 • Loose : இது உடை அளவுகளில் ஏற்படும் லூஸ் தன்மை அல்ல. ஒரு மனிதன் தன் சுயத்தை இழந்தவன் போல் நடந்துகொண்டால் அவனை சுட்டும் பெயராக பயன்படுத்தப்படுகிறது. இது இப்போது எல்லாம் சகஜமான வசை சொல்லாகவே மாறி விட்டது.

 • We’re like that only: நாங்க எல்லாம் அப்படித்தான் என்று சொல்ல இந்த சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பழக்கம், கலாச்சாரம் இப்படி தான், எங்கள் நம்பிக்கை இது தான் என்று குறிப்பிட இது பயன்படுத்த படுகிறது

 • Shut the fan/light: விளக்கை அணை, மின்விசிறியை நிறுத்து(off ) என்று சொல்ல இந்த சொல்லாடல் பயன்படுகிறது

 • Out of station: Out of station = out of town.
  Out of station என்றதும் ஏதோ ரயில் நிலையத்தின் வெளியே இருக்கிறார் என்று பொருளில்லை. ஊரில் ஆள் இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார் என்று பொருள்

 • Sleep is coming: தூக்கம் வருகிறது என்பதை அப்படியே ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து Sleep is coming என்று வைத்து விட்டனர்.

 • Any good news? இது எதோ தேர்வில் பாஸ் ஆன செய்தியோ, போட்டியில் வென்ற செய்தியோ கேட்பதில்லை. ஒரு திருமணமான பெண் கர்ப்பம் தரித்துவிட்டாரா என்று வினவ கேட்பது.

 • Hello, I’m Pinky this side: இது நம்ம 'பசங்க' பட விமல் பாணி தான். 'இங்குட்டு மீனாட்சி அங்குட்டு யாருனு' கேட்கும் தொனி

 • Going to take head bath: இன்றோடு தலை முழுகப்போகிறேன் என்பதன் நேரடி அங்கில மொழி பெயர்ப்பு

 • She just cut the call: போனை கத்தியால் வைத்து வெட்டுவதோ, கத்திரிக்கோலால் வெட்டி துண்டாக்குவதோ இல்லை. இணைப்பை துண்டித்துவிட்டார் என்பதையே குறிக்கும்

 • Auntie: இப்படி ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் இல்லையாம். aunt என்பது தான் சரியான வார்த்தை. ஆனால் இந்தியாவில் அதை இழுத்து Auntie என்றாக்கி விட்டனர்.

 • Rubber: அமெரிக்காவில் ஆணுறையை சுட்ட இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு இந்தியாவில் இது எழுதியதை அழிக்கும்  eraser எனும் அழிப்பானை சுட்ட பயன்படுத்த படுகிறது . நினைத்துப்பாருங்கள் அமெரிக்காவிற்கு சென்று உங்கள் ரப்பரை பயன்படுத்திக்கொள்ளவா என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்?


3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள்..! -அட நம்புங்க பாஸ்

 • Good name: ஒருவரிடம் பெயர் கேட்கும் போது உங்கள் பெயர் என்ன என்று மட்டும் கேட்காமல் நல்ல பெயர் என்று கேட்பது.. அப்போது கெட்ட பெயர் என்று ஒன்று இருக்குமா என்ன?

 • Cousin sister and cousin brother: cousin எனும் சொல் பாலினம் சுட்டாத ஒரு பொதுப்பெயர். பெற்றோரோடு பிறந்த சகோதர சகோதரிகளின் பிள்ளைகளை சுட்ட பயன்படுத்தப்படும். அது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நாம் தான் அதோடு sister, brother என்று தேவை இல்லாமல் சேர்த்து பயன்படுத்துகிறோம்

 • Mother Promise:இந்த அம்மா சத்தியம், வடிவேலு சொல்லும் மாமியார் மேல சத்தியம் எல்லாம் நம் ஊரை விட்டால் எங்கும் காண முடியாது.

 • This is my Mrs/Mr: இது என் கணவர் / மனைவி என்று அறிமுகப்படுத்த வேண்டும். மனைவி என்பதற்கு பதிலாக mrs என்பது எல்லாம் நம் ஊருக்கே உரித்தானது.

 • Before me, there are three brothers, then is me, then two more sisters are coming:எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர் என்பது இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: English, INDIAN

அடுத்த செய்தி